Asianet News TamilAsianet News Tamil

ஒரு கைப்பிடி வால்நட்டு தினமும் சாப்பிட்டால், கிடைக்கும் அற்புதம் இதுதான்..!!

வால்நட்டுகள் வெறும் ஊட்டச்சத்துக்கான தேவையாக மட்டுமில்லாமல், பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது.
 

eating of walnut daily will have more health benefits you never known
Author
First Published Nov 20, 2022, 12:22 PM IST

ஆஸ்துமா, மூட்டுவலி, வகை 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் போது உடலில் வீக்கம் எடுக்கும். இதை ஒழிக்க வால்நட்ஸ் தினமும் சாப்பிட்டால் போதும். வால்நட்ஸுகளில் போராட உதவுகின்றன.அமினோ அமிலமும், இந்த பிரச்னையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். இந்நிலையில் தினமும் வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு உடல்சார்ந்த பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

குடல் ஆரோக்கியம்

வால்நட்ஸுகளில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கூடுதலாக, இதில் ப்ரீபயாடிக் கலவைகள் உள்ளன. இதன்மூலம் லாக்டோபாகிலஸ் போன்ற ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எடை குறைப்பு

வால்நட் பசியை அடக்கி எடை குறைக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சில வால்நட் பருப்புகள் எடுத்துக்கொள்வதன் மூலம், சீக்கரமாகவே உங்கள் உடலில் இருக்கும்  கொழுப்பு குறைகிறது. இதன்மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைவதால், நமக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.

சருமம் பாதுகாக்கப்படும்

வால்நட்ஸுகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈ காரணமாக சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

இந்த கொட்டையில் அதிகளவிலான புரதமும் மற்றும் நல்ல கொழுப்பு கொட்டிகிடக்கின்றன. இதை தினந்தோறும் கையளவு எடுத்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட்ஸை சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி எளிதாக கிடைத்துவிடுகிறது.

குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வீட்டு வைத்திய வழிமுறைகள்..!!

நன்றாக ஆழ்ந்த தூக்கம் வரும்

இன்றைய நவீன உலகில் சுற்றி இருக்கும் சூழல் காரணமாக தூக்கமின்மை பிரச்னையால் பலரும் அவதி அடைய நேருகிறது. அதுபோன்ற பிரச்னை இருக்குமானால், தினமும் இரவு தூங்கச் செல்லும் முன், வால்நட்டுகளை பொடி செய்து பாலுடன் கலக்கி குடிக்கலாம். இல்லையென்றால் அதை தனியாகவும் சாப்பிட்டலாம். இதை 2 வாரம் தொடர்ந்து செய்தால், தூக்கமின்மை பிரச்னை விரைவில் நீங்கிவிடும்.

இளமையில் ரகசியம் காக்கும்

வால்நட்டுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள், எப்போதும் இளமையுடனே இருப்பர். இதற்கு சரும சுருக்கங்களை போக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. தினமும் இதை சாப்பிடுபவர்களுக்கு, அவர்கள் உடலின் வறட்சிநிலை மாறும். அதேபோன்று வால்நட்டை கொஞ்சம் பால்விட்டு அரைத்து, முகத்துக்கு ஸ்கிரெப்பாக கூட பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருந்திட்டுக்களை இது எளிதில் அகற்றிவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios