குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வீட்டு வைத்திய வழிமுறைகள்..!!
குளிர்காலத்தில் ஒருவர் சந்திக்கும் பொதுவான முடி பிரச்சனைகளில் ஒன்று பொடுகு. அதை சரிசெய்வதற்கு பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் எளிய வீட்டு மருத்துவ வழிமுறைகள் கொண்டு, எளிதாக பொடுகை விரட்டலாம்.
குளிர்காலம் வர வர, நமது சருமமும் கூந்தலும் வறண்டு போகத் தொடங்கும். ஒருசிலருக்கு உச்சந்தலையில் அதிக அரிப்பு ஏற்படும். இது பொடுகுக்கு வழிவகுக்கிறது. இதைப் போக்க பலரும் ஷாம்பூவை பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால் அவற்றில் அதிகளவு ரசாயன சேர்க்கைகள் உள்ளன. தற்போதைக்கு பலன் தருவதாக இருந்தாலும், எதிர்காலத்தில் முடி வளர்ச்சி அது ஆபத்தாக அமையும். ஷாம்பூ பயன்படுத்துவதால் முடி பலவீனமடைந்து உதிரத் தொடங்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் பொடுகு உங்கள் தலைமுடிக்கு கவலையாக இருந்தால், பொடுகு இல்லாத மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
முட்டை
ஒரு கிண்ணத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டையை உடைத்துக்கொள்ளவும். மஞ்சள் கரு மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை பிரிக்கவும். இப்போது, முட்டையின் வெள்ளைக்கருவை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி கழுவவும். இப்படி செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், உங்களுடைய தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சேதமடைந்த சிறுநீரகத்திற்கு என்ன நடக்கும்?
ஆப்பிள் சீடர் வினிகர்
பொடுகுத் தொல்லையை வேரில் இருந்து நீக்க வேண்டுமானால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலக்கவும். இந்த கலவையுடன் உங்கள் உச்சந்தலையை மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, தலைமுடியைக் கழுவி, ஷாம்பு போட்டு அலசவும். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவினால் பொடுகு தொல்லை உடனடியாக நீங்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய்: இந்தியில் ‘ஜைதுன் கா தேல்’ என்று அழைக்கப்படும் ஆலிவ் எண்ணெய் பொடுகு மற்றும் வறட்சியை நீக்க பெரிதும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் எண்ணெயை கலக்கவும். பிரஷ் உதவியுடன் உச்சந்தலையில் தடவவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த செயல்முறையை வாரமிருமுறை செய்து வந்தால், விரைவாக பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.