காலையில் எழுந்தவுடன் இந்த டீயை குடிச்சுப் பாருங்க- உடலுக்கு புத்துணர்ச்சி கூடும்..!!
நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பது இன்றைய காலத்தில் மிகவும் சவாலாக உள்ளது. அதற்கு உறுதுணை செய்யும் வகையில் ஒரு புதிய பானம் குறித்து இங்கே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பது இன்றைய காலத்தில் மிகவும் சவாலாக உள்ளது. அதற்கு உறுதுணை செய்யும் வகையில் ஒரு புதிய பானம் குறித்து இங்கே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த பானத்தை குடித்துக் கொண்டு மட்டும் இருந்துவிடக் கூடாது, உடல்நலம் பெற வேண்டும் என்றால், உடலை மிகவும் இயக்கத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாம் வாழக்கூடிய உலகம் முழுவதும் வாகனப் புகை, மாசு, புழுதி போன்றவற்றால் சூழ்ந்துள்ளது. மனிதன் செய்யும் மாசுபாடு வளிமண்டலத்தையும் பாதிக்கச் செய்துள்ளது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அதைவிட முக்கியமாக உள்ளது. அப்போதுதான் தொற்று நோய் பாதிப்பு, திடீர் காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரும் போது, நமது உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி துணிவுடன் போராடும்.
இதற்கு உடலை எப்போதும் இயக்கத்தோடு வைத்திருக்க வேண்டும். அதேபோல உட்கொள்ளும் உணவுகளும் ஆரோக்கிய நலனோடு இருப்பது அவசியம். அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு பானம் குறித்த விபரங்களை தெரிந்துகொள்வோம். அதை பானம் என்று சொல்வதை விடவும், டீ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அதற்கு இஞ்சி முக்கியமாக தேவைப்படுகிறது.
உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!
மனிதனுக்கு இஞ்சி மூலம் பல பலன்கள் கிடைக்கின்றன. உடலுக்குள் தேங்கியுள்ள சளி, ரத்தக் கட்டிகளை நீக்க இஞ்சி மருந்தாக செயல்படுகிறது. அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வரட்டு இருமல் உடனடியாக நிற்கும். இஞ்சியை தொடர்ந்து எலுமிச்சைப் பழம் இந்த டீக்கு தேவைப்படுகிறது. இஞ்சி, எலும்பு மற்றும் தேன் சேரும் போது உடலுக்கு மகத்துவம் கிடைக்கிறது. அதனுடன் மஞ்சள் சேர்த்தால் கிருமித் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
இந்த பாத்திரத்தில் தண்ணீரை சேமித்தால் உடலுக்கு நன்மை பெருகும்..!
மேலும் இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு மற்றும் துளசி இலைகளை சேர்த்தும் இந்த டீயை தயாரிக்கலாம். இதன்மூலம் உடலுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் பெருகின்றன. தற்போது கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக இந்த டீ-யை குடித்தால், உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும். மேலும் செரிமானப் பிரச்னை எது இருந்தாலும், உடனடியாக தீர்ந்துவிடும்.
இந்த தேநீரை காலையிலும் மாலையிலும் இரண்டு முறை குடிப்பது உடலுக்கு பல்வேறு வகையில் ஆரோக்கியம் கிடைக்கும். வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பதை விடவும், ஒரு பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது உடலில் அமிலத்தின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.