கர்ப்ப காலத்தில் மறந்தும் கூட இந்த நிலையில் தூங்காதீங்க...கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளுமாம்...

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

dont sleep in this position the umbilical cord wrapped around the baby neck in tamil mks

தொப்புள் கொடி என்பது ஒரு குழாய் போன்ற அமைப்பாகும். இது தாய் மற்றும் குழந்தையை இணைக்கும். தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நீண்ட தொப்புள் கொடி அல்லது குழந்தையின் அசைவு போன்ற பல காரணங்களால் இது குழந்தையின் கழுத்தில் சுற்றப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை வைத்து குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்.  அந்த வகையில் தொகுப்பு நாம் கர்ப்பிணி பெண் எந்த நிலையில் தூங்கினால் குழந்தைக்கு தொப்புள் கழுத்தில் சுற்றாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இப்படி தூங்க வேண்டும்:
கர்ப்பிணி பெண் எப்போதும் இடது பக்க நிலையில் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு பெண் இந்த நிலையில் தூங்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் சப்ளை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு பெண் படுக்கையில் இருந்து எலும்ப விரும்பும் போதெல்லாம் முதலில் இடது பக்கம் நகர்ந்து பிறகு எழுந்து நிற்க வேண்டும் மற்றும் திடீர் என்று எழும்ப கூடாது.

இதையும் படிங்க: மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா? அது நல்லதா?

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் 5 மாதங்கள் வரை எந்த நிலையில் தூங்கினாலும் சரி. ஆனால் 5 மாதத்திற்கு பின் முடிந்தவரை ஒரு பக்கமாக சரிந்து படுத்துக்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இடது புறம் தான் சரிந்து தூங்க வேண்டும். மேலும் தூங்கும் போது வயிற்று பகுதியில் தலையணை வைத்து சாய்ந்தவாறு படுத்துக் கொள்வது குழந்தைக்கு மிகவும் நல்லது.

இப்படி தூங்க கூடாது:
மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் 5 மாதம் கழித்து மறந்தும் கூட நேராக படுக்க கூடாது. அவ்வாறு படுத்தால் குழந்தையின் எடையால் கருப்பையில் அழுத்தம் ஏற்படும். இதனால் குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் 5வது மாதத்தில் இருந்து நேராக தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதத்தில் உடலுறவு கொள்வது ஆபத்து.. அது குழந்தையை பாதிக்கும்

பொதுவாகவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் எல்லாவிதமான  பிரச்சினைகளும் குழந்தையோடு இணையும் என்பதால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios