Coconut: தூங்குவதற்கு முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
சமையலில் அதன் சுவையைக் கூட்டுவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே தேங்காயை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும். தேங்காயில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி மட்டுமல்லாமல், அனைத்து விதமான கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளது.
சமையலில் அதன் சுவையைக் கூட்டுவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே தேங்காயை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும். தேங்காயில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி மட்டுமல்லாமல், அனைத்து விதமான கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளது.
நாம் சாப்படக் கூடிய ஆரோக்கியமான உணவுகளில் தேங்காயும் ஒன்றாகும். இது எண்ணற்ற சுகாதார நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதிலும், தேங்காய்க்குள் இருக்கும் வெள்ளை சதைப்பகுதி இன்னமும் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. தேங்காயில் இருந்து தேங்காய்ப் பால் மற்றும் தேங்காய் எண்ணெய்களை பிரித்தெடுக்க முடியும். தேங்காய் உங்களின் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால், அதிகமான நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, தேங்காயின் சதைப்பகுதி கொழுப்பு எரிபொருளாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
தூங்குவதற்கு முன்பு தேங்காய் சாப்பிடுவோம்
இரவில் தூங்குவதற்கு முன்பாக தேங்காய் சாப்பிட்டால், நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது. பலன்கள் பல நிறைந்த இத்தகு தேங்காயை, நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
தூங்குவதற்கு முன்பாக, பச்சையாக தேங்காயை சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இருக்கும் கொழுப்பு, உடலில் இருக்கும் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
Grape water: திராட்சை தண்ணீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
செரிமான ஆரோக்கியம்
இரவில் தூங்குவதற்கு முன்பு தேங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதன் பலனாக மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இரவில் உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக, தேங்காய்ப் பால் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
தேங்காயில் செலினியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்தல் மற்றும் முடியின் அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்பட விடாமல் தடுக்கிறது.