கையில் பயன்படுத்தாமல் இருக்கும் பல தசை மற்றும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து போகலாம் அல்லது பயனற்று இருந்தால் மறைந்தும் கூட போகலாம். அந்த வகையில் நமது கையின் மணிக்கட்டில் உள்ள இந்த பால்மாரிஸ் லோங்கஸை என்ற தசை மறைந்து வருகிறது, இது ஒரு பரிணாம வளர்ச்சி என்று கூறுகின்றனர்.

நமது கையின் மணிக்கட்டு இணைப்பில் பங்கெடுக்கும் ஐந்து தசைகளில் ஒன்று இந்த பால்மாரிஸ் லோங்கஸை. உள்ளங்கை வரை நீளமாக உள்ள இந்த தசை மணிக்கட்டின் நெகிழ்வுத் தன்மையை ஆக்டிவேட் செய்கிறது.

இந்த தசை நமது உடலின் அசைவு, இயக்கம், சீரான ரத்த ஓட்டம், பேச்சு, உடலில் சூட்டை உண்டாக்க, உடல் வடிவம் மற்றும் உடலின் சில உட்பாகங்களை பாதுகாக்க உதவி புரிகிறது.

மேலும் இந்த தசை நம் உடலில் இருக்கும் இடத்திற்கு ஏற்ப தோல் மற்றும் எலும்புடன் ஒட்டி, தசைநார் பிணைப்புடன் மிகவும் வலிமையாக இருக்கும்.

கையின் உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு பகுதியினை முறுக்கும்போது இந்த பால்மாரிஸ் லோங்கஸை என்ற தசையானது நமது கண்களுக்கு தெரியும்.