கோடையில் நீர்ச்சத்து குறைபாடு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சிறுநீரக கற்கள் முதல் பெரிய லிஸ்ட்!!
Dehydration: கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீரிழப்பு பல நோய்களை ஏற்படுத்துகிறது. சிறுநீரக ஆரோக்கியம் முழுவதுமாக பாதிக்கிறது.
Dehydration: வெயில் காலங்களில் நீரிழப்பு ஏற்படுவது பொதுவான பிரச்சனை. உடலுக்கு அதிகப்படியான திரவம் தேவைப்படும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் உடலில் உள்ள அனைத்து திரவங்களும் வெளியேறும். இதுவே நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் நம்முடைய சிறுநீரக ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? நம் உடலில் நீரிழப்பு காரணமாக என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு பார்க்கலாம்..
நீரிழப்பு
நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீர் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கிறது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மேலும், அதிகமாக நாம் திரவ உணவுகளை எடுத்து கொள்ளாவிட்டால் சிறுநீர் செறிவூட்டப்படுகிறது. இது சிறுநீர்ப்பை தொற்று, மற்ற சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் சிறுநீரக அமைப்பு சரியாக செயல்பட உடல் எப்போதும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம்.
சிறுநீரக கற்கள்
நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் தேவையற்ற கழிவுகள், தாதுக்கள் குவிவதற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாகவே சிறுநீரக கற்கள் உருவாகுகிறது. இந்த கற்கள் சிறுநீர் பாதையில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று
உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற போதுமான சிறுநீரை உற்பத்தி செய்யாமல் போகலாம். இது தொற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
சிறுநீர்ப்பை பிரச்சினைகள்
உடலில் நீர்ச்சத்து குறையும் போது சிறுநீர் அடர்த்தி அதிகமாகிறது. இதனால் சிறுநீர்ப்பை எரிச்சல் அடைகிறது. இதனால் உண்டாகும் எரிச்சல் சிறுநீர் கழிக்கும் போது வலி உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும். நாள் முழுவதும் நிறைய திரவங்களை குடிப்பதால் சிறுநீர் நீர்த்துப்போகும். இதனால் சிறுநீர்ப்பை எரிச்சலும் குறைக்கிறது. இதனால் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் குறையும்.
இதையும் படிங்க: பேரழகுக்கு ஆசைப்பட்டு.. அடிக்கடி வைட்டமின் ஈ மாத்திரை ஆயில் முகத்தில் தடவுகிறீர்களா? அதனால் இவ்ளோ பாதிப்புகள்!
புரோஸ்டேட் பிரச்சினைகள்
அடிக்கடி தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற திரவம் எதுவும் பருகாமல் இருந்தால் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரின் அளவு குறைவதற்கு காரணமாகிறது. அதாவது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது. இது புரோஸ்டேட் சுரப்பி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர் ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
விறைப்புத்தன்மை கோளாறு
நீரிழப்பு ஏற்பட்டால் ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டம் குறையும். இது விறைப்புத்தன்மை கோளாறுக்கு வழிவகுக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும் போது, அது ஆணுறுப்பிற்கு போதுமான இரத்த ஓட்டத்தை அனுப்பமுடியாத நிலையில் கொண்டு விடுகிறது.
மேலே சொன்ன பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்க நீரேற்றமாக இருப்பது அவசியம். கோடைகாலத்தில் உடல் பராமரிப்பு ரொம்ப அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க: Dry ginger: சுக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இஞ்சியை விடவும் இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?