Asianet News TamilAsianet News Tamil

பால் அதிகம் குடிப்பவரா ?.. அப்போ உடனே இதை படியுங்கள்...!

பால் ஆரோக்கியம் நிறைந்தது. ஆனால் அதையும் அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் அதுவும் நஞ்சு தான். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் படியுங்கள்.

dangerous of drinking too much milk
Author
First Published Apr 22, 2023, 1:07 PM IST | Last Updated Apr 22, 2023, 1:07 PM IST

பாலில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகம் தருகிறது. பாலில் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனைப் போல, பால் அதிகமாக குடித்தால் அது நஞ்சாக மாறிவிடும். ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் எலும்பு முறிவு ஏற்படும்.

பாலில் கலந்திருக்கும் லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் என்ற பொருள் கலந்திருக்கிறது. இதில் சர்க்கரை தன்மை அதிகம் இருப்பதால் 
பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தம் என்று ஆய்வில் கூறப்படுகின்றது. பாலில் கால்சியம், வைட்டமின் டி, பி 12, புரோட்டின் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதையும் படிங்க: அடிவயிற்று தொப்பையை எளிதாக குறைக்க வேண்டுமா? வெறும் 3 பயிற்சிகள் போதும்! சிக்குனு ஆகிடுவீங்க!

பாலை அதிக அளவு குடித்தால் சிலருக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் பக்கவிளைவுகள்,
உடல் சோர்வு, வயிறு மந்தம், நோய் அலர்ஜி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் மட்டுமே குடிக்க வேண்டும்.  

பெண்களைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு தினமும் மூன்று டம்ளர் பால் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம். எனவே இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால் மட்டுமே பால் குடிக்க வேண்டும். 

நீங்கள் அதிகம் பால் குடிப்பவராக இருந்தால் முடிந்தவரை அதனை குறைத்துக் கொள்வது உங்க்ள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios