அடிவயிற்று தொப்பையை எளிதாக குறைக்க வேண்டுமா? வெறும் 3 பயிற்சிகள் போதும்! சிக்குனு ஆகிடுவீங்க!
அடிவயிற்று தொப்பையை விரைவில் குறைக்க பயனுள்ள டிப்ஸை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் பலருக்கும் உடல் எடை அதிகமாகிவிடும். அதன் பின்னர் என்ன செய்தாலும் உடல் எடை இம்மியளவு கூட குறையாது. அதிலும் அடிவயிற்று தொப்பை கல் போல கரையவே கரையாது. அதனை எப்படி குறைக்க வேண்டும்? முதல் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் வாரத்தில் 5 முதல் 6 நாள்கள் செய்ய வேண்டும்.
நமக்கு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் எடை விறுவிறுவென ஏறிவிடும். அதிலும் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மற்ற நோய்களும் ஏற்படும். ஒருவர் நாள்தோறும் 8 அல்லது அதற்கும் அதிகமாக தூங்கினால் உடல் ஆரோக்கியமாகவும், எடை கட்டுக்குள்ளும் இருக்கும்.
இதையும் படிங்க: மாம்பழம் கூட இதையெல்லாம் சாப்பிட்டால் இவ்ளோ பிரச்சனைகளா!?
இரவில் நன்றாக தூங்குபவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது. டைப் 2 நீரிழிவு மாதிரியான நோய்கள் வராது. இரவில் நன்றாக தூங்காமல் போனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை ஏற்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்க 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.
உடற்பயிற்சிகள்
சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடை குறையும். ஆனால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜம்பிங் ஜாக்ஸ், ஹை நீஸ், ஸ்குவாட், கிரஞ்ஜஸ், லஞ்சஸ், ரிவர்ஸ் ப்ளாங் போன்றவை நல்ல பலன் தரக்கூடியவை. ஆரம்பத்தில் இவற்றை 3 செட் 15 கவுண்ட் செய்தால் போதும். நாளடைவில் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடல் எடை கணிசமாக குறையும். வாக்கிங், ஸ்கிப்பிங் தினசரி செய்யலாம்.
இதையும் படிங்க: கோடையில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கலாமா? அது நல்லதா!