Asianet News TamilAsianet News Tamil

கடுகின் நன்மைகள் தெரியும்- அதனுடைய எண்ணெய் பற்றி தெரியுமா உங்களுக்கு..??

கடுகு எண்ணெய் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை தருகிறது. சரும் பிரச்னைகளை போக்குகிறது, இருதய நலனை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 

Cooking with mustard oil has many benefits
Author
First Published Nov 10, 2022, 11:33 AM IST

கடுகு எண்ணெயில் சமைப்பதில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதில் மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கடுகு எண்ணெயில் புற்றுநோய் பாதிப்பை எதிர்க்கும் பண்புகளும் காணப்படுகின்றன.

தென்னிந்தியாவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போல, வட இந்தியாவில் கடுகு எண்ணெய் மிகவும் பிரபலமானது. இதை உணவில் சேர்த்துக்கொள்வது இருதய நலனுக்கு வழிவகுக்கிறது. கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இவை இரண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.

அதேபோன்று கடுகு எண்ணெய்யில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி சமைப்பதன் மூலம் உணவின் சுவை கூடுவது மட்டுமில்லாமல், சரும பிரச்னை மற்றும் அதுசார்ந்த நோய்களும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. 'கடுகு எண்ணெயில் சமைப்பதால் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன.

இதில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA மற்றும் PUFA) மற்றும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கடுகு எண்ணெயில் புற்றுநோய்க்கு எதிரான குணமும் உள்ளது. கடுகு எண்ணெயில் சமைத்த உணவுகள் அதன் சுவையை அதிகரிக்கும் என பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலம் வந்துவிட்டது... கொஞ்சம் டெங்குவை பற்றி பேசுவோமா..??

கடுகு எண்ணெய் உடலின் நலனுக்கு சக்திவாய்ந்த தூண்டுதலாக செயல்படுகிறது. இதன்மூலம் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதால் கல்லீரலின் செரிமானச் சாறுகள் மற்றும் பித்தம் தூண்டப்படுகிறது. இதனால் செரிமானம் மேம்பட்டு பசி தூண்டப்படுகிறது. சாதாரணமாக இருக்கும் போது வேறு நிறத்தில் தெரியும் கடுகு எண்ணெய், சூடுபடுத்தினால் தங்க நிறத்தில் மாறும். அதன்மூலம் இதனுடைய சுவையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

கடுகு எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. தோல் உதிர்வது, சருமம் வறண்டுபோவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்குகிறது. கடுகு எண்ணெயை உடலில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. கடுகு எண்ணெயில் உள்ள செலினியம் வீக்கம் மற்றும் வலியை நீக்குகிறது. மூட்டுவலி வலியை நீக்குகிறது. கடுகு எண்ணெய் இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios