மழைக்காலம் வந்துவிட்டது... கொஞ்சம் டெங்குவை பற்றி பேசுவோமா..??

மழைக்காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவிடும். இதற்கு அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். எனினும் டெங்கு பாதிப்பை தடுக்க தனிநபர் சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
 

know the facts of dengue fever and symptoms

கொசுவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் காலைநேரத்தில் மட்டும் கடிக்கும் ஏ.டி.எஸ் என்கிற கொசு மூலமாக தான் டெங்கு பாதிப்பு மனிதர்களிடையே பரவுகிறது. இதை சாதாரண காய்ச்சல் தானே என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்றால், மரணம் சம்பவிக்க அதிக வாய்ப்புள்ளது. உலகளவில் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்காக நீங்கள் அச்சங்கொள்ள தேவையில்லை. சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்களை எளிதில் விரட்டிவிடலாம். அதுகுறித்த புரிதல் மற்றும் உண்மைகளை விரிவாக தெரிந்துகொள்வோம்.

ஆரம்பக்கட்ட பாதிப்புக்கு பப்பாளி இலைகள்

ஆய்வுகளின் டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட பாதிப்பை சரி செய்வதற்கு பப்பாளி இலைகள் உதவுவது தெரியவந்துள்ளது. ஆனால் அது ஆரம்பக்கட்ட பாதிப்புக்கு மட்டுமே, ஒருவேளை நோய் தீவிரமடைந்தால் மருத்துவ சிகிச்சையை மட்டுமே கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். பப்பாளி இலைகள் டெங்கு அறிகுறிகளை தற்காலிகமாக போக்குவதற்கு மட்டுமே உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டெங்குவின் தீவிரத்தை உணர்ந்து செயலாற்றுங்கள்

கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு பாதிப்பை பலரும் சாதாரண ஒரு காய்ச்சல் என்றே பலரும் எண்ணுகின்றனர். உண்மையில் இது தீவிரமடைந்தால் உயிரையே பறித்துவிடும் அளவுக்கு அபாயமுண்டு. இதனுடைய ஆரம்பக்கட்டத்தில் தலைவலி, மூக்கடைப்பு, மூட்டு மற்றும் முதுகு வலி, அரிப்பு, காய்ச்சல், கண்களுக்கு பின்னால் வலி உள்ளிட்ட பல விதமான அறிகுறிகள் தோன்றும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், நோய் தீவிரமடைந்து உயிரிழப்புக் கூட நேரலாம்.

கொரோனா வேறு டெங்கு வேறு

டெங்கு மற்றும் கொரோனா தொற்று இரண்டுமே வேறு வேறு கிருமிகளால் ஏற்படுகின்றன. இரண்டுக்குமே வீரியம் அதிகமாக உள்ளது. உரிய சிகிச்சை மற்றும் கவனம் கொடுக்கவில்லை என்றால், மரணம் கூட ஏற்படக்கூடும். உங்களுக்கு டெங்குவுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக உரிய மருத்துவரை அணுகுங்கள். ஆரம்பக்கட்ட டெங்கு நிலை என்றால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து சாப்பிடுவது ஓரளவுக்கு உதவி செய்யும்.

know the facts of dengue fever and symptoms

சளி, கபம், மூச்சுத்திணறலை ஓட ஓட விரட்டும் சூப்பர் சூப்.!!

எப்படி வேண்டுமானாலும் டெங்கு வரலாம்

ஒரு நோய் பாதிப்பு இருக்கும் போது, டெங்கு வராது என்று பலரும் நினைக்கின்றனர். ஒருவேளை உங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் போது, ஏ.டி.எஸ் கொசு கடித்தால் உங்களுக்கு டெங்குப் பாதிப்பு வரக்கூடும். இதனால் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேலும் பாதிக்கப்படும். கொரோனாத் தொற்று மற்றும் டெங்கு பாதிப்பு இரண்டுமே வேறு வேறு நோய்த் தொற்றுகள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டெங்கு நான்கு முறைக் கூட வரலாம்

ஒருவருக்கு ஒருமுறை தான் டெங்கு வரும் என்று சொல்லிவிட முடியாது. டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த வைரஸுக்காக எதிர்ப்புச் சக்தி உடலில் வளர்ந்துவிடும் என்பது உண்மை தான். அதனால் மீண்டும் டெங்கு பாதிப்பு வராமல் இருக்காது என்று கூறிவிட முடியாது.  இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், ஒரு நபருக்கு நான்கு முறை வரை டெங்குவின் தாக்குதல் ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இரண்டாவது முறை ஏற்படும் போது, தாக்குதலின் அளவு குறைந்து காணப்படலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios