உங்களை அறியாமலேயே நீங்கள் தினமும் செய்யும் சில காலை பழக்கங்கள் உடலில் வைட்டமின் பி12 அளவை குறைத்து விடும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானோருக்கு காலையில் ஒரு குறிப்பிட்ட வழக்கத்துடன் தங்களது நாளை தொடங்குவது பழக்கம். உதாரணமாக ஒரு கப் சூடான காபி, டீ,பால் அல்லது ஸ்மூத்தி குடிப்பது. காலை எழுந்தவுடன் மொபைல் போனை பார்ப்பது, பாட்டு கேட்பது போன்றவையாகும். இத்தகைய சூழ்நிலையில் நம்மளை நாம் அறியாமலேயே தினமும் செய்யும் சில காலை பழக்கங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாடிற்கு பங்களிக்கக்கூடும் என்று உங்களுக்கு தெரியுமா?
உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் என்ன ஆகும்?
- எப்போதுமே களைப்பாகவும் ஆற்றல் இல்லாமலும் உணர்தல் - கை கால்களில் கூச்சம் மற்றும் உணர்வின்மை - எரிச்சல், குழப்பம் மற்றும் அதீத மனசோர்வு - கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு - வாய் மற்றும் நாக்கு வீங்குதல், வலி, சிவத்தல் - தோல் மஞ்சள் அல்லது வெளிறிய நிறத்தில் இருப்பது - மூச்சு விடுவதில் சிரமம் இதே துடிப்பில் மாற்றம் - இரத்த சிவப்பணுக்கள் குறைந்து, இரத்த சோகை ஏற்படுத்தும் - நிரந்தர நரம்பு பிரச்சனைகள், வலிப்புகள் - மோசமான மனநலக் கோளாறுகள்
இப்போது வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்தும் சில காலைப் பழக்க வழக்கங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. காபி, டீ குடிப்பது
பெரும்பாலானோரின் காலை பழக்க வழக்கங்களில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. தினமும் காலை எழுந்தவுடன் டீ, காபி குடிப்பவர்களுக்கு அதை குடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் வைட்டமின் பி12 குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படியெனில் டீ, காபியில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சேர்மங்கள் உள்ளன. மேலும் லேசான டையூரிக் விளைவுகளையும் கொண்டுள்ளன. இது சிறுநீர் மூலம் பி2 போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் இழப்பை அதிகரிக்க செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
2. அமில நீக்கி மருந்துகள் :
வயிறு கோளாறு அல்லது அமில ரிஃப்ளக்ஸிற்கு அமில எதிர்ப்பு மருந்துகளை சிலர் அடிக்கடி எடுத்துக் கொள்வதை பழக்கமாக வைத்துள்ளனர். நீங்களும் அமில நீக்கி மருந்துகளை அதுவும் காலை வேளையில் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அது உங்களது உடலில் வைட்டமின் பி 12 உறிஞ்சதலை பாதிக்கும். எப்படியெனில், இந்த மருந்துகள் வயிற்று அமிலத்தின் அளவை குறைக்கலாம். ஆனால் இது உங்கள் குடல் உணவிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய வைட்டமின் பி12 அளவை குறைத்து விடும். இறுதியில் வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு வழிவகுக்கும். எனவே, செரிமான பிரச்சனை, வயிற்றுக் கோளாறு, அமிலர் ரிஃப்ளக்ஸ், இரைப்பை அழற்சி உள்ளவர்கள் இந்த மருந்துகளை நீண்ட காலமாக பயன்படுத்த வேண்டாம்.
3. அதிக நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுடன் நாளை தொடங்குவது ஆரோக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் முழு தானியங்கள், சில காய்கறிகள் என அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது வைட்டமின் பி12 உறிஞ்சுதலுக்கு இடையூறு ஏற்படுத்தும். அதுபோல பி12 சப்ளிமெண்ட் அல்லது உணவுகள் எடுத்துக் கொள்ளும் அதே சமயத்தில் பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது வைட்டமின் பி12 உறிஞ்சுதலை குறைக்கும். எனவே நீங்கள் காலையில் நார்ச்சத்து நிறைந்த மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை தொடங்க விரும்பினால் அது உடலில் வைட்டமின் வைட்டமின் பி12 அளவை குறைக்க கூடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. பி12 சப்ளிமெண்ட்கள் :
நீங்கள் வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் அதற்கு நேரம் மிகவும் முக்கியமானது. பொதுவாக இந்த சப்ளிமெண்டை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பலர் டீ, காபி குடித்த பிறகு அல்லது உணவுக்கு பிறகு பி12 சப்ளிமெண்டை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி எடுத்துக் கொண்டால் அதன் உறிஞ்சுதல் திறன் குறையக்கூடும். எனவே, பி12 சப்ளிமெண்டை மருத்துவர் பரிந்துரைத்த படி எடுக்கவும்.
5. புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் :
சிலர் புகை பிடித்தல் அல்லது மது அருந்துதல் சிலர் காலை பழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆனால் இந்த பழக்கம் உடலில் வைட்டமின் பி12 உறிஞ்சுதலை பாதிக்கும். இது தவிர நாள்பட்ட இந்த பழக்கமானது செரிமான செயல்பாட்டையும் பாதிக்கும்.


