Asianet News TamilAsianet News Tamil

குளிர்காலத்திற்கு முன்பு மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரிக்கலாம்.. சீன நிபுணர்கள் எச்சரிக்கை..

குளிர்காலத்திற்கு முன்னதாக சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

China on Alert covid 19 likely relapse ahead of winter key points Rya
Author
First Published Nov 15, 2023, 7:58 AM IST | Last Updated Nov 15, 2023, 7:58 AM IST

குளிர்காலம் காலம் நெருங்கி வரும் நிலையில், கொரோனா தொற்று மீண்டும் பரவக்கூடும் என்று சீனா முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயதான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை தடுப்பூசி போடுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அக்டோபரில் நாடு முழுவதும் மொத்தம் 209 புதிய கடுமையான கோவிட்-19 பாதிப்பு மற்றும் 24 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய மாறுபாடுகள் காரணமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ள் அனைத்தும் XBB வகை கொரோனா அதிகமாக பரவுகிறது என்றும் தெரிகிறது. சீனாவின் உயர்மட்ட சுவாச நோய் நிபுணர் Zhong Nanshan இதுகுறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளார். அதாவது குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு உயரக்கூடும் என்றும், முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குளிர்காலம் நெருங்கி வருவதால், கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தவிர, சமீபத்திய வாரங்களில் மைக்கோபிளாஸ்மா நிமோனியா நிமோனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.  அடுத்த வசந்த காலம் வரை பல சுவாச நோய்க்கிருமிகளின் கலவையான தொற்று குறித்து நோய் தடுப்பு மையம் எச்சரித்தது. 

சீனாவில் மீண்டும் கோவிட்-19 வருமா?

கொரோனா வைரஸ் பிறழ்வுகளுக்கு உட்பட்டுள்ளது, அதே நேரத்தில் பொது மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது, ஏனெனில் நேரம் செல்ல செல்ல அவர்களின் ஆன்டிபாடி அளவு குறைகிறது என்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே குளிர்காலத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்கக்கூடும். மேலும், இலையுதிர் மற்றும் குளிர்காலம் அதிக இன்ஃப்ளூயன்ஸா விகிதங்களுக்கு அறியப்படுகிறது, எனவே இணை-தொற்றுநோய்கள் குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நபரா? இனி ஜாக்கிரதையா இருங்க.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!

குளிர்காலத்தில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்றாலும், அதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு பெரிய தொற்றுநோயாக மாறியது, இதனால் லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இறந்தனர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. உலகையே உலுக்கிய வைரஸ் உஹானில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என்ற குற்றச்சாட்டை சீனா உறுதியாக மறுத்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸின் மாறுபாடுகளுடன் உலகம் போராடும் போது, ​​சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உலகின் பிற பகுதிகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios