கர்ப்பிணிப் பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த ஆயுர்வேத டிப்ஸ பாலோ பண்ணுங்க...!!
கர்ப்ப காலத்தில், பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உணவில் இருந்து அன்றாடப் பழக்கம் வரை. அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்கள் ஆயுர்வின்படி சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
கர்ப்பம் என்பது எந்தவொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு பொற்காலம். இந்த நேரத்தில் பெண்களின் உடலில் பல உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களுக்கும் நிறைய உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் சரியான கவனிப்பு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசியம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சரியான பராமரிப்பு மற்றும் உணவு கிடைக்கவில்லை என்றால், அது அவர்களின் உடலை பாதிக்கிறது. இந்த நாட்களில் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் நிறைய கூறப்பட்டுள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்:
ஆயுர்வேதத்தின்படி, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பசுவின் நெய், பால் மற்றும் பால் பொருட்களை உங்கள் உணவில் ஒரு அங்கமாக்குங்கள். காய்கறிகள், பருவகால பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் நட்ஸ்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள். இந்த நாட்களில் ஆரோக்கியமான உணவு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசியம்.
உடல் செயல்பாடு:
கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடு மிகவும் முக்கியம். நிச்சயமாக, கர்ப்ப காலத்தில் ஒருவர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்களில், அதிகப்படியான பயணம் மற்றும் தீவிர கார்டியோ உடற்பயிற்சி தவிர்க்கப்பட வேண்டும். தினமும் நடக்கவும், லேசான உடற்பயிற்சி செய்யவும். அதுபோல எந்த வகையான யோகா மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வழக்கத்தில் சேர்க்கலாம் என்பதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
ஆயுர்வேத மசாஜ்:
ஆயுர்வேத மசாஜ் கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேத மசாஜ் வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யப்பட வேண்டும் என்றுnநிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
நன்றாக சாப்பிடவும்:
கர்ப்ப காலத்தில் பல சமயங்களில், சில பொருட்களை சாப்பிட்ட பிறகு ஒருவர் நன்றாக உணர்கிறார். மறுபுறம், சில பொருட்களின் வாசனை அவர்களுக்கு பிடிப்பதில்லை. எனவே அச்சமயத்தில் நீங்கள் விரும்பும் உணவை நன்றாக சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: இரத்தத்தில் சர்க்கரை அளவை எகிற வைக்கும் 3 மாவுகள் எவை தெரியுமா? தவறுதலா கூட சுகர் இருக்கவங்க சாப்பிடாதீங்க!!
இதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்:
பெரும்பாலும் சிறுநீர், ஏப்பம், தும்மல் அல்லது கொட்டாவி விடாமல் தடுக்கிறோம். சில நேரங்களில் பொது இடத்தில் இருப்பது, சில சமயங்களில் வேறு சில காரணங்களுக்காக நாம் இவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்போம் ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் இதைச் செய்யவே கூடாது. இது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.