Toenail: கால் ஆணியால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
கால் ஆணி என்றால் பெரும்பாலும், கால் விரல்களுக்கு இடையில் தான் உருவாகும். ஆனாலும், தடிமனாகும் சமயத்தில் ஆணி, கால் வலியை உண்டு செய்கிறது.
கால் ஆணி என்றால், பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால், இதைப் பற்றி நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். பொதுவாக கால் ஆணி என்பது, நம் பாதத்தின் அடிப்பகுதியில் வருகின்ற ஒரு சிறு புண்ணாகும். இது பார்ப்பதற்கு அமைப்பில் ரப்பர் போல இருக்கும். பெரும்பாலும், கால் விரல்களுக்கு இடையில் தான் உருவாகும். ஆனாலும், தடிமனாகும் சமயத்தில் ஆணி, கால் வலியை உண்டு செய்கிறது.
கால் ஆணியை குணமாக்கும் முறைகள்
கால் ஆணி வந்துவிட்டால், முதலில் நாம் பயப்படுவதை நிறுத்திவிட்டு, தகுந்த சிகிச்சை முறைகளை எடுக்க வேண்டும். கால் ஆணியை மிகவும் எளிமையான முறையில் கூட குணமாக்க முடியும். இப்போது அவை என்னென்ன முறைகள் என்பதை காண்போம்.
அதிமதுரம் குச்சிகள் 3 முதல் 4 அளவு எடுத்துக் கொண்டு, அதனை அரைத்து, நல்லெண்ணெய் சிறிதளவு கலந்துகொண்டு, பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பேஸ்ட்டை இரவு உறங்குவதற்கு முன்பாக கால் ஆணி உள்ள இடத்தில் தடவ வேண்டும். தினசரி இதனை செய்து வந்தால், கடினமான தோல் படிப்படியாக மென்மையாகி விடுவதோடு, கால் ஆணியும் குணமாகும்.
Novel Fruit: இந்த ஒரு பழம் போதும் உங்களின் சிறுநீரகத்தைப் பாதுகாக்க!
அரைத் தேக்கரண்டி பப்பாளி சாற்றை எடுத்து, கால் ஆணி மீது தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளி சாற்றைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறை, கால் ஆணியை ஈரத்துணியால் துடைத்த பிறகு சாறு வைக்க வேண்டும்.
இரவுப் பொழுதில் எலுமிச்சையை கால் ஆணி மீது வைத்தால் கூட குணமாகி விடும். இரவு முழுக்க எலுமிச்சையை வைக்க அசெளகரியமாக இருந்தாலும் கூட, ஒரு மணி நேரமாவது வைத்து எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலங்களில் எலுமிச்சையை அதிக நேரம் வைத்திருக்க கூடாது. அரைத் தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை எடுத்து கால் ஆணியின் மீது வைத்து வரலாம். தினந்தோறும் 3 முறை இதனைச் செய்து வந்தால் கால் ஆணி பூரணமாக குணமாகும்.
சாக்பீஸ் சிறு துண்டு எடுத்து தண்ணீருடன் கலந்து, பேஸ்ட் போல அரைத்து பாதிக்கப்பட்டப் பகுதியில் தடவி வர வேண்டும். தொடர்ந்து, இதனை செய்தால் கால் ஆணி குணமாகி விடும்.