Asianet News TamilAsianet News Tamil

Stop Sugar: சர்க்கரையை விரும்பி உண்பவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!

சர்க்கரை வெற்று கலோரிகளால் நிரம்பியுள்ளது. சர்க்கரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெகு விரைவாகவே நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.

Are you a sugar lover? This alert is for you!
Author
First Published Jan 27, 2023, 7:22 PM IST

இன்று மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாக மிக முக்கிய காரணமாக இருக்கும் ஒரு பொருள் தான் சர்க்கரை. அந்த அளவிற்கு இதனை நாம் பயன்படுத்தி வருகிறோம். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். வெறும் இனிப்புச் சுவைக்காக, தங்கள் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர் மக்கள். ஏனென்றால், சர்க்கரை வெற்று கலோரிகளால் நிரம்பியுள்ளது. சர்க்கரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெகு விரைவாகவே நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.

சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டால் தாமதமான செரிமானம், முகப்பரு, இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் தான், அதிக சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் உணவில் இருந்து ஒரு வார காலத்திற்கு, வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்து விட்டால், உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகின்றது. அவ்வகையில் அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.  

வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்போம்

  • நம்முடைய அன்றாட உணவில் இருந்து, வெள்ளை சர்க்கரையை குறைப்பது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்துகிறது.
  • செரிமானத்தை வேகமாக மற்றும் எளிதாக செய்ய, ஒரு வாரத்திற்கு சர்க்கரை உணவுகளை நிறுத்தி விட்டு, மாற்றத்தை நீங்களே நன்றாக கவனித்துப் பாருங்கள். சர்க்கரை உட்கொள்வதை நிறுத்திய ஒரு வாரத்திற்குள் உள் வீக்கத்தை குறைக்கத் தொடங்கும்.
  • டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்துள்ள பானங்களை தூங்குவதற்கு முன்பு உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால், இதன் காரணமாக தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெண்களின் வரப்பிரசாதமான கேழ்வரகு வைத்து சத்தான அடை செய்யலாமா !

தவிர்க்க வேண்டிய சர்க்கரை உணவுகள்

உங்கள் அன்றாட உணவில் இருந்து சர்க்கரையை குறைக்க வேண்டும். வெள்ளை சர்க்கரை மட்டுமின்றி குளிர் பானங்கள், கேக்குகள், பிஸ்கட்கள், சாக்லேட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ள உணவுகளையும் நீங்கள் அவசியம் நிறுத்த வேண்டும். சர்க்கரையை எடுத்துக் கொள்வது, உடனடி சர்க்கரை வேகத்தை கொடுக்கலாம். ஆனால், அதன் பின்னர் உங்களுடைய ஆற்றலை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கச் செய்து விடும். ஆகவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெள்ளை சர்க்கரை சார்ந்த உணவுகளைத் தவிர்த்து, சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பல பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios