Chicken: தினந்தோறும் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!
பிராய்லர் சிக்கனை அளவில்லாமல் எடுத்துக் கொண்டால், பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதும் பலரும் அறிந்த ஒன்று. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும், அதன் சுவௌ காரணமாக பலரும் அதிகளவில் சாப்பிடுகின்றனர்.
நம்மில் பலருக்கும் சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சிக்கனை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், எதையுமே ஒரு அளவோடு சாப்பிட வேண்டும். இல்லையெனில், பாதிப்பு நமக்கு தான். அதிலும் பிராய்லர் சிக்கனை அளவில்லாமல் எடுத்துக் கொண்டால், பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதும் பலரும் அறிந்த ஒன்று. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும், அதன் சுவௌ காரணமாக பலரும் அதிகளவில் சாப்பிடுகின்றனர்.
சிக்கன் உணவு
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் நபர்களில், சுமார் 75 சதவீதம் பேர் இந்த சிக்கனைத் தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். சிக்கனை பல வகைகளில் வித விதமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். சிக்கனில் புரோட்டீன் மற்றும் பிற சத்துக்கள் அதிக அளவில் இருந்தாலும், இதனை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக தினந்தோறும் சாப்பிட்டால் நமது உடலுக்கு பாதிப்பு தான் ஏற்படும்.
சிக்கன் சாப்பிடுவதால் உண்டாகும் பாதிப்புகள்
- தொடர்ச்சியாக சிக்கனை சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும்.
- இதயம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
- சில சமயங்களில் உணவு கூட விஷமாக மாறும்.
- இரத்த லிப்பிடுகளின் அளவை உயர்த்தி விடும்
- உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரித்து விடும்.
- நம் உடலில் அதிக சூட்டை கிளப்பி விடுவதால், உடல் உபாதைகள் ஏற்படும்.
- உடலில் சோடியத்தின் அளவானது அதிகரித்து விடும்.
- செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். இதனால், பலரும் அவதிப்படுவார்கள்.
- சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும்.
- கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
- மூட்டுவலி பிரச்சனையும் சிக்கன் சாப்பிடுவதால் உண்டாகும்.
விலங்கு அடிப்படையிலான சிக்கன் போன்ற புரதச்சத்தை அதிகமாக உண்பது, உடல் எடையைப் பராமரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. தினந்தோறும் இறைச்சி சாப்பிடுபவர்களை காட்டிலும், சைவ உணவை எடுத்துக் கொள்பவர்கள் குறைந்த BMI அளவைக் கொண்டுள்ளனர்.
இட்லிக்கு இப்படி “தயிர் கார சட்னி” வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது!
பிராய்லர் கோழி வேண்டாம்!
ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகளில் தசை வளர்ச்சி அதிகரிக்கப்படுதால், மிகவும் குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவார்கள். ஆகையால், பெண்களுக்கு பிராய்லர் கோழிக் கறி கொடுப்பதை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.
பிராய்லர் கோழி இறைச்சியை உண்பதால் இரைப்பை கோளாறுகள், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். மேலும், பிராய்லர் கோழி கால்களுக்கு மிகவும் நஞ்சானது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.