இட்லிக்கு இப்படி “தயிர் கார சட்னி” வைத்து சாப்பிட்டால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது!
வாருங்கள்! காரசாரமான தயிர் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் நாம் சாப்பிடும் இட்லி, தோசைக்கு கார சட்னி,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, பூண்டு சட்னி என்று பல விதங்களில் சட்னி செய்து சாப்பிட்டு இருப்போம்.என்றாவது தயிர் சேர்த்து சட்னி செய்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவை படித்து செய்து பாருங்கள். பொதுவாக கார சட்னி எனில் மிளகாய் வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் தயிர் வைத்து ஒரு அட்டகாசமான வாய்க்கு ருசியான காரசாரமான இந்த சட்னியை சட்டென்று எளிதில் செய்ய உள்ளோம்.
வாருங்கள்! காரசாரமான தயிர் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- தயிர் -1/2 கப்
- வெங்காயம் – 1
- பூண்டு-10 பற்கள்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் -1 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் -1 ஸ்பூன்
- தனியா – 1ஸ்பூன்
- கறிவேப்பிலை -1 கொத்து
- உப்பு-தேவையான அளவு
- நல்லெண்ணெய் -தேவையான அளவு
ஆரோக்கியத்திற்கு ஏற்ற அருமையான ஆந்திரா கோங்குரா சட்னி! இப்படி செய்து பாருங்க!
செய்முறை:
முதலில் அரை கப் கெட்டி தயிரை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டினை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக அரிந்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். ( எண்ணெய் அதிகமாக சேர்ப்பதால் சட்னியின் சுவை கூடுதலாக இருக்கும். மேலும் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
எண்ணெய் சூடான பின் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதிக பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு வதக்கி விட வேண்டும். இப்போது இடித்து வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கி விட்டு,பின் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து தனியா தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து அவைகளின் மசாலா வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இவைகளின் காரத் தன்மை சென்ற பிறகு, பீட் செய்து வைத்துள்ள தயிர் சேர்த்து தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். தொடர்ந்து கிளறிக் கொண்டே வரும் போது அனைத்தும் சுண்டி கிரேவி பதத்தில் மாறும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட்டு அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் காரசாரமான தயிர் சட்னி ரெடி!