Asianet News TamilAsianet News Tamil

உடலின் இந்த பகுதிகளில் கொழுப்பு சேர விட்றாதீங்க..!! அப்பறம் வருத்தப்படுவீங்க..!!

மார்பகம், வயிறு, இடுப்பு மற்றும் கழுத்தில் கொழுப்பு சேர்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறிப்பிட்ட பகுதிகளில் சேரும் கொழுப்புகள் பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். முதுகு அல்லது இடுப்பை விட வயிறு தடிமனாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 

Accumulation of fat in these parts of the body  is not good for health
Author
First Published Dec 2, 2022, 5:23 PM IST

மார்பகம் உட்பட உடலின் சில பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு சேருவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதற்கேற்ப உடற்பயிற்சி செய்யாதவர்களின் உடலில் கொழுப்பு சேரும். உடலில் கொழுப்பு சேர்ந்தால், உருவம் மாறும். உடலின் சில பகுதிகளில் கொழுப்பு குவிவது மோசமானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு எளிதில் ஏற்படக்கூடும். சிலர் உடல் கொழுப்பை அதிகப்படுத்துவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அதைக் குறைக்க கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் உடல் பாகங்களில் சேரும் கொழுப்பை குறைக்க முயற்சிப்பவர்கள் வெறு சிலரே. உடலின் சில பகுதிகளில் நல்ல கொழுப்பு சேர்வதால் அதிக பிரச்சனை ஏற்படாது. எனவே, எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்வது பிரச்னை இல்லை, எந்தப் பகுதியில் பாதிப்பு அதிகம் என்பதை தெரிந்து கொள்வோம்.

முதுகு மற்றும் தொடை

இடுப்பு மற்றும் தொடைகளில் கொஞ்சம் கொழுப்பு சேர்ந்தால் பிரச்சனை இல்லை. இருப்பினும், அங்குள்ள தசைகள் மீது அழுத்தம் கொடுக்க போதுமான கொழுப்பு இருக்கக்கூடாது. அமெரிக்காவின் சான்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முதுகில் கொழுப்பு திரட்சி இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுப்பதாக தெரியவந்துள்ளது. மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுவாக முதுகை விட வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Accumulation of fat in these parts of the body  is not good for health

மார்பு பகுதியில் கொழுப்பு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் மார்பு அழகுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. ஆனால் கொழுப்பு காரணமாக மார்புப் பகுதிகள் பெரியதாக இருந்தால், சில நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகரிக்கிறது. பெரிய மார்பகங்களைக் கொண்ட 20 வயது பெண்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மார்பகங்களில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் அதிகரிப்பதே பிரச்சனைக்கு மூல காரணம். மேலும் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Scutch grass juice: மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல் சாறு: தொடர்ந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா!

வயிற்றில் கொழுப்பு

கெட்ட கொழுப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது இருதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மனச்சோர்வு, மறதி மற்றும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்துகிறது. இந்த கெட்ட கொழுப்பு அல்லது நிறைவுறாத கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் குவிகிறது. இடுப்பு மற்றும் வயிற்றின் சுற்றளவு பின்புறத்தை விட அதிகமாக உள்ளவர்களுக்கு இதய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இடுப்பு சுற்றளவைக் குறைக்க, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும் மற்றும் புரத உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். தகுந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

கழுத்தில் கொழுப்பு

கழுத்து பகுதியில் கொழுப்பு சேர்வதை பலர் பார்த்திருப்பார்கள். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அல்லது ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மோசமாக்கும். நுரையீரலில் அதிக அழுத்தம் (மன அழுத்தம்) தூக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். மேலும், ஹார்மோன்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவான அளவில் சுரக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios