இந்த 3 பொருட்கள் போதும்...மாதவிடாய் பிரச்சனைக்கு குட்பை சொல்லிடலாம்
உடல் ஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. வீட்டில் இருக்கும் முக்கியமான 3 மசாலா பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாற்றத்தை காண முடியும்.

பெண்கள் தங்களின் வாழ்நாளில் ஒவ்வொரு காலகட்டத்தில் குறிப்பிட்ட உடல் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. பருவமடைதல் துவங்கி, கர்ப்பம், மாதவிடாய், முதிர் வயது வரை பல விதமான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. இவற்றை முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை நிச்சயம் குறைக்க முடியும். இதற்கு தினசரி சரியான அளவில் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினசரி எடுத்துக் கொள்ளும் உணவு என்பது பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தினசரி உணவில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் பெண்களின் ஆரோக்கியத்தில் மிக அற்புதமான நன்மைகளை வழங்குகின்றன. மாதவிடாய் கால பிரச்சனைகள் துவங்கி, ஹார்மோன் சமநிலை வரை பலவிதமான நன்மைகளை தருகின்றன. பெண்கள் தினமும் தங்களின் உணவில் 3 மசாலாக்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். என்ன அந்த 3 மசாலாக்கள்?
1. கொத்தமல்லி விதைகள் :
தனியா எனப்படும் கொத்தமல்லி விதைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளன. இத உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்க உதவுகின்றன. அது மட்டுமல்ல, செரிமானத்திற்கும் இவைகள் உதவுகின்றன. வாயு தொல்லை, குடல் வீக்கம், வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
2. ஓமம் :
ஓமம் விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து சளி, இருமல் போன்ற பொதுவாக நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஓமத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, தசைகள் இறுக்கம் போன்றவற்றை குறைக்கும்.
3. பெருஞ்சீரகம் :
சோம்பு அல்லது பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளன. இத பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. கொத்தமல்லி விதைகளை போலவே செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றன. வழக்கமாக வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை இது குறைக்கிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
* கொத்தமல்லி விதைகளை தண்ணீருடன் கொதிக்க வைத்து டீ யாக தயாரித்து, வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது சட்னியாக செய்தும், கொத்தமல்லி இலைகளை ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.
* ஓமத்தை வெறும் வயிற்றில் உப்பு சேர்த்து சாப்பிடலாம். டீ, சப்பாத்தி தயாரிக்கும் போது அதோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.
*பெருஞ்சீரகத்தை உணவுக்கு முன்பும், பிறகும் பச்சையாக மென்று சாப்பிடலாம் அல்லது டீ தயாரித்து குடிக்கலாம்.
பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் :
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சில குறிப்பிட்ட பொருட்களை அல்லது உணவுகளை தவிர்ப்பது மிக நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகிய பொருட்களை தங்களின் தினசரி உணவில் குறைத்துக் கொள்வது நல்லது. இந்த உணவுகள் ஹார்மோன் சமநிலை மற்றும் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவை ஆகும்.