Asianet News TamilAsianet News Tamil

தினமும் உள்ளங்கையில் இப்படி 2 நிமிடங்கள் செய்தால் போதும்!! தீராத ஒற்றை தலைவலி கூட குறையும்..

உள்ளங்கையில் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

2 minutes touching a pressure point benefits
Author
First Published May 26, 2023, 11:52 AM IST

லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பதை பழக்கமாக்கி உள்ளனர். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். உடலின் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் உடலின் மீது தாக்கம் உருவாகிறது. இவை அழுத்தப் புள்ளிகள் (pressure points) என்று அழைக்கப்படுகின்றன. அழுத்த புள்ளிகள் உடலின் ரகசிய பொத்தான் (secret buttons) போல செயல்படுகின்றன.   

மசாஜ் நுட்பங்கள், ரிஃப்ளெக்சாலஜி குறித்து தெரிந்தவர்களுக்கு இந்த புள்ளிகளை குறித்து தெரிந்திருக்கும். ஓரியண்டல் மருத்துவத்தின் படி, இந்த புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதால் சில உடல் நல பிரச்சனைகளை எதிர்த்து போராடலாம். இது எளிமையான செயல்முறை. ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே செய்தால் போதும். 

உங்கள் அழுத்த புள்ளிகள் என்ன செய்கின்றன? 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தத்தை கொடுப்பதன் மூலம், நீங்கள் உடலை தூண்டலாம். இதற்கு சரியான நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய கைகளை சரியாகத் தூண்டினால், முழு உடலுக்கும் கூடுதல் ஆற்றல் கிடைக்கும். அனைத்து உள் உறுப்புகளையும் தூண்டுவதற்கு அழுத்தப் புள்ளிகளைப் பயன்படுத்த முடியும். இதனால் சோர்வு வராது. உங்களுடைய உடல் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கிடைக்கும். 

நம்முடைய கைகளில் பல்வேறு அழுத்தப் புள்ளிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது உள்ளங்கையில் இருக்கும் புள்ளி. நம் உடலைத் தூண்டுவதற்கு இது பெரும்பாலும் ஓரியண்டல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதை எப்படி செய்வது என்று பாருங்கள். 

இதையும் படிங்க: ஆண்களுக்கும் பிரீயட்ஸ் வருமா? அது வரும்போது என்னென்ன அறிகுறிகளை காட்டும் தெரியுமா?

செய்முறை 

  • உங்கள் உள்ளங்கையின் மையத்தில் இருக்கும் சின்ன பள்ளத்திற்கு எதிராக உங்கள் கட்டைவிரலை வையுங்கள்.
  • உங்கள் கட்டைவிரலால் அங்கு வட்டமாக அழுத்தவும் அல்லது மசாஜ் செய்யவும். இதை நன்கு அழுத்தமாக செய்ய வேண்டும். ஆனால் வலியை ஏற்படுத்தும் அளவிற்கு அல்ல.
  • தினமும் ஒரு நாளுக்கு இப்படி 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 

touching a palm pressure point benefits

நன்மைகள்: 

  1. அழுத்தப் புள்ளிகள் உடல் முழுவதும் ஆற்றலைப் பரப்புகின்றன. நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.    
  2. உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பதால் மன அழுத்தம், ஒற்றைத் தலைவலியை குறைக்கலாம். பற்கள், தோள்கள், கழுத்து பகுதிகளில் உள்ள வலியைக் குறைக்கிறது. 
  3. அழுத்தப் புள்ளிகள் எந்த எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது. உதாரணமாக, மருந்து உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இது முற்றிலும் இயற்கையானது. 

இதையும் படிங்க: தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!

Follow Us:
Download App:
  • android
  • ios