Asianet News TamilAsianet News Tamil

கணவர்கள் தங்கள் மனைவியிடம் பேசவே கூடாத 7 விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக இது முக்கியம்!!

Husband and Wife : இல்லறம் எப்போதுமே நல்லறமாக இருக்க கணவர்கள், சில தேவையற்ற விஷயங்களை தங்கள் மனையிடம் பேசாமல் இருக்க வேண்டும்.

top 7 things which a husband should never say to his wife ans
Author
First Published Aug 11, 2024, 11:57 PM IST | Last Updated Aug 12, 2024, 9:18 AM IST

நல்ல திருமணத்தின் அர்த்தம் என்பது இரண்டு உடல்களுக்கு மத்தியில் ஏற்படும் இணைப்பு என்பதை தாண்டி, இரு மனங்கள் ஒன்றாக இணைந்து இறுதிவரை சந்தோஷமாக வாழ்வதிலேயே இருக்கிறது. அந்த வகையில் கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பேசக்கூடாத ஏழு விஷயங்கள் குறித்து இப்போது காணலாம். 

உங்களுடைய மனைவி உங்களை விட எடை கூடுதலாகவோ, அல்லது உயரம் சற்று குறைவாகவோ இருந்தால், நிச்சயம் அவர்களுடைய உயரம் மற்றும் உடலின் அமைப்பு குறித்து கேலியாகவும், கிண்டலாகவும் ஒருபோதும் பேசக்கூடாது. அது ஆரம்ப கட்டத்தில் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், நாளடைவில் அது அவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுக்கும். 

முத்தம் கொடுக்கும் போது ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இவையே..!

சமையல் என்பது ஒரு கலை, ஆனால் அது ஒருவரில் இருந்து மற்றவரிடம் மாறுபடும். ஒரு ஆண் சிறு வயது முதல் தனது தாயின் அரவணைப்பில் அவருடைய கைப்பக்குவத்தில் உணவுகளை உண்டு வளர்ந்திருப்பர். ஆனால் திருமணம் என்று வரும்பொழுது, தன் மனைவியின் கை பக்குவத்திற்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மாறாக தன் மனைவி சமைப்பது, தனது தாய் சமைப்பது போல ருசியாக இல்லை என்று கூறுவது அவர்களை மிகப் பெரிய அளவில் சோகத்துக்கு உள்ளாக்கும்.

திருமணமான தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தான். அதை விரைந்து சரி படுத்த பார்க்க வேண்டும் அல்லது அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். இது இரண்டுமே இல்லாமல். அவர் ரொம்பவும் சத்தம் போடுகிறார் என்று பேசுவது, உனக்கு இதுவே தான் எப்பொழுதும் வேலை என்று அவரை கடிந்து கொள்வது கூடாது. 

இன்னொரு குடும்பத்திலிருந்து தனது கணவனை மட்டுமே நம்பி அவரது வீட்டுக்கு வரும் ஒரு உயிர் தான் மனைவி. ஆகவே தனது குடும்பத்தார் முன்னிலையில் அவரை தனது குடும்பத்திற்கு ஏற்றார் போல உடனடியாக நீ மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரை கடிந்து கொள்வது மிகப்பெரிய பிளவுகளை கணவன் மனைவி உடலில் ஏற்படுத்தும். 

அதேபோல உங்களை மட்டுமே நம்பி உங்கள் வீட்டிற்கு வரும் மனைவி குறித்தோ அல்லது அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்தோ தவறாக மற்றும் உதாசீனப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும் அது உங்கள் மேல் உள்ள நல்ல அபிப்பிராயத்தை குறைத்து விடும். 

தனது வீட்டில் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு, தனது கணவனை நம்பி வருகின்ற பெண்ணை எப்பொழுதும் நீயும் உன் தாய் போலத்தான் இருக்கிறாய் என்று கூறி அவர்களை கோபமடைசெய்யக்கூடாது என்பதை கணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
 
வேலை முடிந்து நீங்கள் வீட்டுக்கு திரும்பும் பொழுது. நீங்கள் காலையில் சொல்லிச் சென்ற ஏதோ ஒரு வேலையை உங்கள் மனைவி மறந்திருக்கலாம். அதற்கு காரணம் அவருடைய அதீத வேலை தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாறாக காலையிலிருந்து நீ என்னதான் செய்து கொண்டு இருந்தாய் என்று கோபமாக அவரிடம் பேசக்கூடாது. 

தூக்கத்தில் இருக்கும் போதே உடலுறவு.. பலரும் பேச தயங்கும் இந்த பாதிப்பு பற்றி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios