Asianet News TamilAsianet News Tamil

தூக்கத்தில் இருக்கும் போதே உடலுறவு.. பலரும் பேச தயங்கும் இந்த பாதிப்பு பற்றி தெரியுமா?

செக்ஸ்சோம்னியா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இது ஒரு வகையான தூக்கக் கோளாறு. இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

What is Sexsomnia: know about the sex during sleep in tamil Rya
Author
First Published Aug 8, 2024, 7:04 PM IST | Last Updated Aug 8, 2024, 7:04 PM IST

செக்ஸ்சோம்னியா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இது ஒரு வகையான தூக்கக் கோளாறு. பொதுவாக பலரும் பேச தயங்கும் பிரச்சனை இது.. அதாவது செக்ஸ்சோம்னியா இருந்தால் தங்களுக்கு அருகிலுள்ள நபருடன் உடலுறவு கொள்ளலாம் அல்லது சுயஇன்பம் அல்லது பிற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது பலருக்கும் நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மையில் செக்ஸ்சோம்னியாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த பழக்கம் இருக்கும். இந்த கோளாறு பொதுவாக மன அழுத்தம் அல்லது சரியாக தூங்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செக்ஸ்சோம்னியா என்பது ஒரு வகை நோய் ஆகும். தூக்கத்தின் போது அல்லது தூக்கத்திலிருந்து எழும் போது ஏற்படும் அசாதாரண நடத்தைகள், அனுபவங்கள் அல்லது உடலியல் நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படும் தூக்கக் கோளாறு ஆகும். செக்ஸ்சோம்னியா உள்ளவர்கள் தூங்கும் போது சுயஇன்பம் அல்லது உடலுறவு போன்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்று மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் நிபுணர் டாக்டர் ராகுல் சந்தோக் தெரிவித்துள்ளார்..

சாதாரண தூக்க சுழற்சியில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக செக்ஸ்சோம்னியா ஏற்படுகிறது. இதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகள் ஆகியவை காரணங்கள் ஆகும்.. இந்த தூக்கத்தில் நடப்பது மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிற தூக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையது. பொதுவாக விழிப்புணர்வின்றி தூக்கத்தின் போது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது செக்ஸ்சோம்னியாவின் அறிகுறியாகும். இது சுயஇன்பம், உடலுறவைத் தொடங்குதல் மற்றும் பாலியல் சத்தம் அல்லது முனகல் போன்றவற்றை உள்ளடக்கும். தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது ஆகியவை இதன் மற்ற அறிகுறிகளாகும்.

உடலுறவில் ஆர்வமே இல்லையா? இதை மட்டும் சாப்பிடுங்க.. அசுர பலம் கிடைக்குமாம்..

ஒழுங்கற்ற தூக்க அட்டவணை அல்லது அறிமுகமில்லாத இடங்களில் தூங்குவது போன்ற சுற்றுச்சூழல் காரணிகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற பிற தூக்கக் கோளாறுகள் செக்ஸ்சோம்னியா ஏற்பட வழிவகுக்கும். குறிப்பாக பாலியல் அனுபவங்களுடன் இந்த பாதிப்பு இருந்தால், நிலைமையை மோசமாக்கலாம்.

செக்ஸ்சோம்னியாவை எப்படி சமாளிப்பது?

தூண்டுதல்களைத் தவிர்க்கவும்

மது அருந்தும் பழக்கம் அல்லது போதை மாத்திரை ஆகியவை செக்ஸ்சோம்னியா பாதிப்புக்கு தூண்டுதலாக அமையலாம்.. எனவே மது அருந்துவதை தவிர்க்கவும்.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்

சராசரியாக 7 மணி நேரம் முதல் 8  தூங்குஅது அவசியம். சீரான தூக்க முறைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருங்கள்.

'இந்த மாதிரி உடலுறவு வைத்தால் விந்து சீக்கிரம் வெளியேறாது' ரொம்ப நேரம் தாங்கும்.. ஒரு ஆணின் பகிர்வு!!

 பாதுகாப்பான சூழல்

நீங்கள் இருக்கும் சூழல் உங்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில், செக்ஸ்சோம்னியா பாதிப்பின் போது மக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். எனவே, இந்த பாதிப்பின் போது காயத்தைத் தடுக்க அறையிலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றவும்.

தனி படுக்கையறைகளில் தூங்குங்கள்

உங்களுக்கு செக்ஸ்சோம்னியா இருந்தால் தனியாக தூங்குங்கள். உங்களிடமிருந்து விலகி இருக்க வேண்டியது உங்கள் பங்குதாரர் அல்ல. மாறாக நீங்கள் தான் தனி அறையில் இருக்க வேண்டும்..

கருத்தடை முறை

நீங்கள் செக்ஸ்சோம்னியா பாதிப்புள்ள பெண்ணாக இருந்தால், ஆண் துணையுடன் உடலுறவு கொண்டால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கருத்தடை முறையைப் பயன்படுத்துங்கள், ஆனால் உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும். 

செக்ஸ்சோம்னியா உள்ள நபர் படுக்கையில் இருக்கும் துணையுடன் உடலுறவு கொள்ளலாம். செக்ஸ்சோம்னியாவை குணப்படுத்த ஒரு மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios