கருவுறுதலுக்கு அருமருந்து; ஆண்மைக்கு பலம் சேர்க்கும் அற்புதம்- அது இதுதான்..!!

பெண்கள் கருதரிப்பதற்கும் ஆண்மைத்தன்மை சார்ந்த பிரச்னைகள் நீங்குவதற்கும் கடுக்காய் மூலிகை முக்கியத்துவம் பெறுகிறது. அதை உணர்ந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள், அதை பொடியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு கடுக்காய் நிரந்தர தீர்வுகளை வழங்குகிறது. அதேபோன்று உடலில் எங்கு வீக்கம் இருந்தாலும், கடுக்காய் அதை தண்ணீராகக் கரைத்துவிடும். பல்லில் ஏற்படும் நோய்களை தடுக்கவும், சுவாசக் கோளாறு பிரச்னைகளை சரிசெய்வதிலும் கடுக்காய் முக்கியத்துவம் பெறுகிறது. மருந்துகளின் ராஜா என்று அழைக்கப்படும் கடுக்காய்  சீன, நேபாளம் மற்றும் இலங்கையில் பரவலாக உள்ளது. வெறும் உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமில்லாமல் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களையும் எதிர்த்து செயல்படக்கூடிய வல்லமை படைத்தது கடுக்காய்.
 

myrobalan is beneficial for fertility and fertility related problems

இளமையையும் அழகையும் கொட்டிக் கொடுக்கும் கடுக்காய்

ஆயுர்வேத மருத்துவ முறையில் 80 சதவீதம் நோய் பாதிப்புகளை சரிசெய்யக் கூடிய தன்மை படைத்தது கடுக்காய். நாள்பட்ட நோய் பாதிப்பு முதல் குறுகியக் கால நோய் பாதிப்பு வரை அனைத்துவிதமான சிகிச்சைக்கும் கடுக்காயை பயன்படுத்தலாம். மேலும் வாத தோஷ நோய்களுக்கு அருமந்தாகவும் செயல்படுகிறது. எப்போதும் இளைமையுடன் அழகுடன் நம்மை வைத்துக்கொள்ள கடுக்காய் உதவுகிறது. கடுக்காயை தொடர்ந்து சாப்பிடலாம். இதை தினமும் ஒரு கிராம் அளவு எடுத்து வந்தால், பல்வேறு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும். 

செரிமானத்தை ஊக்குவிக்கும் கடுக்காய்

மலச்சிக்கல் இருப்பவர்கள் கடுக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீர் கலக்கி சாப்பிட்டு வருவது நல்ல தீர்வாக அமையும். செரிமானத்துக்குரிய சுரப்பிகளை சிறப்பாக செயல்பட தூண்டும் கடுக்காய், உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சு எடுத்து உறுப்புகளுக்கு தருகிறது. மேலும் உணவுக்குழாய் அழற்சி, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, வாய்வு, வயிற்றுப் புண், இரைப்பை உணவுக்குழாய் வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கடுக்காயை தாரளமாக சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், உடலை வலிமையாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

myrobalan is beneficial for fertility and fertility related problems

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கடுக்காய்

உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்படும் போது, நீரிழிவு நோய் பாதிப்பு உருவாகிறது. இதை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் போராடி வருகின்றனர். அவர்கள் கடுக்காயை தொடர்ந்து சாப்பிடும் போது, சர்க்கரை நோய் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். அதேபோன்று ரத்த அழுத்தம் கொண்டவர்களும் கடுக்காயை சாப்பிடலாம். நீரிழிவு சார்ந்து ஏற்படக்கூடிய அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகளவில் தாகம் எடுத்தல் மற்றும் திடீர் எடை இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வை தருகிறது.

இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!

அழகை மேம்படுத்தவும் உதவக்கூடிய மருந்து கடுக்காய்

கடுக்காயில் பாக்டீரியாக்கள் எதிர்க்கும் தன்மை உள்ளது. அதனால் இதன்மூலம் புற அழகையும் மேம்படுத்த உதவும். முகப்பரு, தடிப்பு, பரு போன்ற சரும் பிரச்னைகளுக்கு கடுக்காய் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. தலையில் பொடுகு, அரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் முடி உதிர்வு போன்ற பிரச்னைக்கும் இது நிவர்த்தி தருகிறது. உடல் சூடு காரணமாக கண்ணில் இருந்து நீர் வழிந்தாலோ, வீக்கம் அடைந்தாலோ அதை சரிசெய்ய கடுக்காயை சாப்பிடலாம். மேலும் கூந்தல் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியுடன் இருக்கவும் கடுக்காய் பெரிதும் உதவுகிறது.

உடலில் பசி அதிகமாக எடுப்பது போன்று உணர்வு ஏற்பட 5 காரணங்கள்..!!

கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் கடுக்காய்

குழந்தைப் பெறுவதற்கான செயல்முறையில் இருக்கும் தம்பதிகள் கடுக்காயை சாப்பிடுவதன் மூலம், விரைவாக கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதேபோன்று ஆண்களுக்கு லிபிடோவை அதிகரிக்கவும், இயற்கையான முறையில் பாலுணர்வு தூண்டப்படுவதற்கும் கடுக்காய் வழிவகை செய்கிறது. ஒருசிலருக்கு பாலியல் உணர்வு ஏற்படும் போது ஒருவித பதட்டமும், படபடப்பும் உருவாகும். அதை கடுக்காய் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆயுர்வேத மருத்துவ முறையில் கடுக்காய் பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios