உங்கள் பழங்களை கழுவ சரியான முறை என்ன? சுகாதார நிபுணர் கூறுவது என்ன?

உங்கள் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களில் இருந்து பழங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை குறித்து சுகாதார நிபுணர் விளக்குகிறார்.

what is the best way to wash your fruit

சாப்பிடுவதற்கு முன் பழங்களைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது மோசமான வயிற்றுப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இறைச்சியை சாப்பிடுவதற்கு முன் சரியாக கழுவப்படாவிட்டால், நோய்களின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். ஆனால், உங்கள் பழங்களைச் சரியாகக் கழுவாமல் இருப்பதும் மோசமான வயிற்றுப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் இது குறித்து தெளிவாக விளக்குகிறார் சுகாதாரத்துறை நிபுணர் ஒருவர்.

நீங்கள் சரியான சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், உண்ணும் முன் உங்கள் பழங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்கள் பழங்களை சரியாக கழுவவில்லை என்றால் அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர் கூறுகிறார். எனவே, உங்கள் புதிய பழங்களை சரியாகக் கழுவுவதற்கான சில வழிகள் இங்கே உள்ளன.

உங்கள் பழங்களை எப்போதும் தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சோப்பு, ப்ளீச் கரைசல்கள் அல்லது பிற கிருமிநாசினிப் பொருட்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். அகையால், உங்கள் பழங்களைக் கழுவுவதற்கு ஓடும் நீரை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஏனெனில் "நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டும்போது தோலில் உள்ள கிருமிகள் உள்ளே செல்லலாம்." 

மென்மையான பழங்களுடன் மென்மையான உராய்வைப் பயன்படுத்தும் போது உறுதியான தோல் கொண்ட பழங்களை சுத்தப்படுத்தலாம். குறிபாக ஆப்பிள், எலுமிச்சை, பேரீச்சம்பழம், கொய்யாப்பழம் போன்ற உறுதியான தோல் கொண்ட பழங்களை நன்கு தேய்க்கவும். பின் நீரில் வைத்து அவற்றின் துளைகளில் இருந்து கிருமிகளை சிறப்பாக அகற்றுவதற்கு ஒரு சுத்தமான, மென்மையான முட்கள் பயன்படுத்துமாறு நிபுணர் பரிந்துரைக்கிறார்.

பெர்ரி, செர்ரி, பீச் போன்ற பழங்களை மேலே சொல்லப்பட்ட பழங்களை கழுவுவது போல் கழுவாதீர். அவை விரைவில் கெட்டு போய் விடும். எனவே, இவற்றை நீங்கள் தண்ணீர் மற்றும் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி மென்மையான உராய்வு மூலம் சுத்தம் செய்யலாம். நீங்கள் பழங்களை நன்கு கழுவிய பிறகு அவற்றை சுத்தமான  துணியைப் பயன்படுத்தி நன்கு உலர வைக்கவும். மேலும் நீங்கள் சாப்பிட விரும்பாத பழங்களை உடனடியாக கழுவ வேண்டாம். அவ்வாறு கழுவினால் அது விரைவில் அழுகி விடும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios