ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும். இருந்தாலும் கிராமத்து சமையலுக்கு இருக்கும் சுவைக்கு எதுவுமே ஈடாகாது. அதிலும் மீன் குழம்பு சொல்லவே வேண்டாம். கிராமத்து ஸ்டைலில் மணக்க மணக்க நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.  

கிராமங்களில், பாரம்பரிய முறையில் சமையல் செய்யப்படும் உணவுகளுக்கு தனித்துவமான சுவை இருக்கும். அதிலும் மீன் குழம்பின் சுவைக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. நெத்திலி மீன் குழம்பு என்பது ஊட்டச்சத்து நிறைந்ததுடன், நம் முன்னோர்கள் செய்த அசத்தலான கிராமத்து உணவாகும். மணம் மாறாத தனித்துவம் கொண்ட குழம்பு, புளிப்பும் காரமும் சேர்ந்து செம உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு (ஊற வைத்து, கெட்டியாக கரைத்தது)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் (பாரம்பரிய சுவை கிடைக்க)
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
தண்ணீர் – தேவையான அளவு

பீட்ரூட் ஜூஸ் நல்லது தான்...ஆனா இவங்க குடிச்சா ஆபத்து ஆகிடும்

செய்முறை:

- முதலில் நெத்திலி மீனை நன்றாக கழுவி, மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். இது மீனில் இருக்கும் சரியாக சுத்தம் செய்யப்படாத கழிவுகள், செதில் பாகங்களை நீக்கி விடும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வறுக்கவும். மண் சட்டியில் சமைப்பது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.
- பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மிளகாய்த்தூள், தனியாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.
- புளியைக் கரைத்து, அந்த நீரை குழம்பில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- குழம்பு நன்கு கொதித்தது பச்சை வாசனை நீங்கியதும், அதில் நெத்திலி மீனை சேர்த்து 5-7 நிமிடம் வேகவிடவும்.
- மீன் வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, கறிவேப்பிலை சேர்த்து மூடி வைக்கவும்.

சமையல் குறிப்புகள்:

- நல்லெண்ணெயில் வதக்கியால், குழம்பிற்கு மணமும், சுவையும் கூடும்.
- புளி மிகுந்தால், குழம்பு குளிர்ச்சி தரும்.
- நெத்திலி மீன் சிறியதாக, மெல்லியதாக இருப்பதால், அதிக நேரம் கலக்காமல் வைத்தால் மீன் உடைந்து விடாமல் சீராக இருக்கும்.
- சூடான சாதத்துடன் பரிமாறினால், அதன் சுவை இரட்டிப்பாகும்.

மஞ்சளை இப்படி பயன்படுத்தினால் உடல் எடை வேகமாக குறையும்

நெத்திலி மீன் குழம்பின் சிறப்பு:

- இது உடல் சூட்டை சமப்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- கிராமத்து சமையல் முறையினால், இயற்கையான ருசியை பெற்றிடலாம்.
- சோற்றுடன் கலந்து சாப்பிட்டால், மிக அருமையாக இருக்கும்.
- நெத்திலி மீன் சிறியதாக இருந்தாலும், இதில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது.
- இதை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்தால், எலும்புகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
- கிராமங்களில் இம்மீன் குழம்பு, காலை உணவாக சூடான இடியப்பத்துடன் பரிமாறப்படும்.
- மண் பானையில் கெட்டியாக வைத்த மீன் குழம்பை முதல் நாள் வைத்து, அடுத்த நாள் மசாலா நன்கு மீனில் ஊறியதும் எடுத்து சாப்பிட்டால்...நாவில் எச்சில் ஊறும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவே தெரியாது.