Tamil New Year 2023 : பாரம்பரிய சுவையில் மாங்காய் பச்சடி செய்து தமிழ் புத்தாண்டினை கொண்டாடுங்கள்
வாருங்கள்! சுவையான மாங்காய் பச்சடி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோடைக்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தமிழ் புத்தாண்டு ஆகும். அத்தகைய சிறப்பான தமிழ் புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது . இந்த கோடைகாலத்தில் மாங்காய் விற்பனையும் சூடு தொடங்க ஆரம்பித்து விடும். மாங்காயை பிடிக்காது என்பவர்களை பார்க்க இயலாது.
கோடைக்காலத்தில் வரும் இந்த தமிழ் புத்தாண்டின் போது பலரது வீடுகளிலும் பாரம்பரியமாக மாங்காய் பச்சடி ரெசிபியை செய்து இனிதே புத்தாண்டினை வரவேற்பார்கள். ஒரு சிலர் இந்த மாங்காய் பச்சடியை அப்படியே சாப்பிடுவார்கள் அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! சுவையான மாங்காய் பச்சடி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 1
வெல்லம் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வேப்பம்பூ - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மாங்காயை அலசி விட்டு பின் அதன் தோல் சீவி ஒரே மாதிரியான அளவில் துண்டுககளாக வெட்டி விட்டு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு , மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் தூவி அடுப்பில் வைத்து வேக விட வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விட்டு அடுப்பில் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் அரிசி மாவு சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாங்காய் நன்றாக வெந்த பின்னர், கரைத்து வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது அதில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவினையும், உப்பும் சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். இப்போது அடுப்பில் 1 வாணலி வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர் அதில் கடுகு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,பெருங்காயத் தூள் மற்றும் வேப்பம்பூ ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இப்போது தாளித்ததை பச்சடியில் சேர்த்து கிளறி விட்டால் டேஸ்ட்டான மாங்காய் பச்சடி ரெடி! இந்த சுவையான மாங்காய் பச்சடியை தமிழ் புத்தாண்டில் செய்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள்!