தமிழ் புத்தாண்டு 2023: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் பைன் ஆப்பிள் பாயசம் செய்து குடும்பத்துடன் கொண்டாடுங்க!

வாருங்கள்! தித்திப்பான பைன் ஆப்பிள் பாயசம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

Tamil New Year 2023  : Tamil new year special Delicious Pine Apple Payasam

நாளை தமிழ் புத்தாண்டினை அனைவரும் கொண்டாட உள்ளோம். பொதுவாக புத்தாண்டின் போது வீட்டில் சில இனிப்புகளை செய்து குடுமபத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டாடுவோம். பொதுவாக பாயசம்,அல்வா போன்றவை பிரதான இனிப்பு வகைகள் என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக பாயசம் எனில் பலரும் சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், பால் பாயசம், பாசிப்பருப்பு பாயசம் போன்றவற்றையே செய்து சாப்பிட்டுவோம்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக முக்கனிகளில் ஒன்றான பைன் ஆப்பிள் வைத்து நாம் பாயசம் செய்ய உள்ளோம்.
வாருங்கள்! தித்திப்பான பைன் ஆப்பிள் பாயசம் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
கன்டெண்ஸ்டு மில்க் - 1 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
வெனிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்
நெய்-தேவையான அளவு
முந்திரி-தேவையான அளவு
கிஸ்மிஸ் -தேவையான அளவு

செய்முறை:

முதலில் அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசியை அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும். மற்றோர் அடுப்பில் ஒரு ஒரு பாத்திரம் வைத்து 1.5 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் .

இப்போது கொதிக்கும் தண்ணீரில் ஜவ்வரிசி சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொத்திய வைத்து பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். பிறகு அதில் கன்டெண்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

கன்டெண்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை ஆஃப் செய்து வைத்து பாயசத்தை இறக்கி விட வேண்டும். இப்போது இதில் ஒரு துளி பைன் ஆப்பிள் எசென்ஸ் மற்றும் வெட்டி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் சிரித்து நெய் ஊற்றி முந்திரி மற்றும் உளர் திராட்சை சேர்த்து பொரித்து அதனை பாயசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான பைன் ஆப்பிள் பாயசம் ரெடி!

க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சியாக இருக்கும் ப்ரக்கோலி மசால் வடை !நீங்க ட்ரை பண்ணிருக்கீங்களா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios