உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதற்கு ரொம்பவே கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த எளிய முறைகளை டிரை செய்த பாருங்கள். இயற்கையான முறையிலேயே கெட்ட கொழுப்புக்களை கஷ்டம் இல்லாமல் குறைக்க முடியும்.
உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகரிப்பதால் தேவையற்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் உடலில் ஏற்படுவது உண்டு. நொறுக் தீனி, அதிக கலோரி கொண்ட உணவுகள், எண்ணெய் உணவுகள், ஃபாஸ்ட் புட் போன்ற பல காரணங்களால் உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது. இப்படி அதிகரிக்கும் கெட்ட கொழுப்புக்களை குறைக்க பல விதமான டயட் முறைகளை கடைபிடித்து அழுத்து போய் விட்டீர்களா? கவலையை விடுங்க. இயற்கையான முறையில் எளிமையாக கெட்ட கொழுப்புக்களை குறைக்கும் சூப்பரான உணவுகள் நிறைய இருக்கும். இவற்றை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே கெட்ட கொழுப்புக்களை ஈஸியா குறைத்து விடலாம்.
கெட்ட கொழுப்புக்களை குறைக்கும் உணவுகள் :
ஓட்ஸ் :

ஓட்சில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இவைகள் கெட்ட கொழுப்புக்களை உடலில் இருந்து உறிஞ்சி வெளியேற்றி விடும். கெட்ட கொழுப்புக்களை கரைக்கக் கூடிய நார்ச்சத்தின் ஒரு வடிவமான பீட்டா குளுக்கன் ஓட்சில் அதிகம் உள்ளது. இவைகள் தமனிகளில் கொழுப்புக்கள் அடைப்பதை தடுத்து, ஆரோக்கியத்தை கொடுக்கின்றன.
நட்ஸ் :
பாதாம், அக்ரூப் பருப்புக்கள், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் ஸ்நாக்சாக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல இதயத்தை காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஆரோக்கியம் தரும் கொழுப்புக்கள், நார்ச்சத்து, தாவர ஸ்டெரால்கள் அதிகம் உள்ளன. இதனால் கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகின்றன. நட்ஸ்களை தினமும் உணவில் குறிப்பிட்ட அளவில் சேர்த்து வந்தால் பலவிதமான வித்தியாசங்களை காண முடியம்.
அவகோடா :

அவகோடா மென்மையாக இருப்பதால் இவற்றில் மோனோசாச்சுரேடட் கொழுப்புக்கள் மற்றும் நாச்சத்து நிறைந்துள்ளன.இவை உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. அதே சமயம் கெட்ட கொழுப்புக்களை உடலில் தேங்க விடாமல் குறைக்க உதவுகின்றன. தினமும் இவற்றை ஸ்நாக்சாக கூட சாப்பிடலாம். இவற்றை இனிப்பு வகைகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
கொழுப்பு நிறைந்த மீன்கள் :
கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 அதிகம் உள்ளன. சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்கள் சுவை அதிகமாக இருப்பதுடன் இடை இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஒமேகா 3 ட்ரைகிளிசரைடுகளை குறைத்து தளனிகளை மென்மையாக பாதுகாக்கிறது. நீங்கள் சைவ பிரியர் என்றால் மீன்களுக்கு பதிலாக ஆளி விதைகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
டார்க் சாக்கலேட் :
டார்க் சாக்லேட் இதயத்திற்கு மிகவும் நல்லது. குறைந்தபட்சம் 70 சதவீதம் கோகோ கொண்ட பிளாக் சாக்லேட்களில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவைகள் கெட்ட கொழுப்புக்களை குறைக்கவும், ரத்த சுழற்சியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
பீன்ஸ் வகைகள் :

கொண்டைக்கடலை, பருப்பு போன்ற பீன்ஸ் மற்றும் பயிறு வகைகள் கொலஸ்டிராலை எதிர்த்து போராடக் கூடியவை ஆகும். இவற்றில் நார்ச்சத்துக்கள் நிரம்பி உள்ளதால் இது முழுமையான நிறைவான உணவை தருவதுடன் கெட்ட கொழுப்புக்களையும் குறைக்க உதவுகின்றன. சாலட்கள், தானியங்கள், பருப்பு வகைகள் என மாற்றி மாற்றி எடுத்துக் கொள்வதால் கெட்ட கொழுப்புக்கள் படிப்படியாக குறைய துவங்கும். இவற்றை சூப்புக்கள், பொரியல் ஆகிவையாகவும் செய்து சாப்பிடலாம்.
