இப்படி பாலக் மட்டன் தொக்கு செய்து கொடுத்தால் பத்தவே பத்தாது!
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாலக் மட்டன் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் நமக்கு விருப்பமானதை வாங்கி வந்து பொறுமையாகவும், சுவையாகவும் சமைத்து அனைவரும் ஒன்று கூடி மகிழ்வுடன் சாப்பிடுவோம். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் பலரும் அசைவ உணவை சமைத்து சாப்பிடுகிறார்கள்.
அசைவத்தில் சிக்கன்,மட்டன் ,மீன்,இறால்,முட்டை என்று பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் மட்டன் வைத்து நாவூறும் பாலக் மட்டன் ரெசிபியை செய்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழுங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாலக் மட்டன் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன்-1/2 கிலோ
பாலக் கீரை -1/2 கட்டு
வெங்காயம் -1
தக்காளி 1
பச்சை மிளகாய் -2
ஏலக்காய்-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 ஸ்பூன்
சோம்புப் பொடி -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 /4 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு -2
மல்லித்தழை-கையளவு
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய்-தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாலக் கீரையை அலசி அரிந்து வைத்துக் கொண்டு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.அடுத்தாக அதில் மிகப் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் குடில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது தக்காளியை சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும் . தக்காளி வதங்கிய பின்னர் அதில் சோம்புத்தூள், மிளகாய்த்தூள்,மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலாக்களின் கார வாசனை சென்ற பிறகு, அலசி வைத்துள்ள மட்டனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து அடுப்பின் தீயனை மிதமாக வைத்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இப்போது அரைத்த கீரையை குக்கரில் சேர்த்து மட்டனும் , கீரையும் நன்றாக சேர்ந்து கலவை சுண்டி வரும் வரை வேக விட வேண்டும். தொக்கு பதத்தில் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் அட்டகாசமான பாலக் மட்டன் தொக்கு ரெடி!