Asianet News TamilAsianet News Tamil

கொளுத்தும் வெயிலுக்கு இந்த மாதிரி மாங்காய் சர்பத் செய்து சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்! 

இன்று நாம் மாங்காய் வைத்து அருமையான சர்பத் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

How to make Raw Mango Sarbat in Tamil
Author
First Published Mar 14, 2023, 6:42 PM IST

கோடை காலத்தில் ஆரம்பிக்கும் போது அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய மாங்காய் மற்றும் மாம்பழ சீசனும் ஆரம்பித்து விடும்.  மாங்காய் புளிப்பாக இருக்கும், உடலில் சூட்டை ஏற்படுத்தும் என்று பெரியவர்கள் கூறினாலும் அதனை பார்த்தால் நிச்சயமாக அனைவரும் அதனை ருசிக்காமல் இருக்க மாட்டார்கள் . 

மாங்காய் வைத்து  மாங்காய் சட்னி, மாங்காய் ஊறுகாய், மாங்காய் சாம்பார், மாங்காய் பச்சடி என்று செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். என்றாவது மாங்காய் வைத்து சர்பத் செய்து சுவைத்துண்டா? இல்லையா அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கு தான். 

வழக்கமாக லெமன் சர்பத், நன்னாரி சர்பத், பன்னீர் சர்பத் என்று இன்னும் பல விதங்களில் சர்பத் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மாங்காய் வைத்து சர்பத் செய்ய உள்ளோம். இந்த கோடைக்காலத்தில் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள பல்வேறு விதமான நீராகாரங்களை எடுத்துக் கொள்வோம். இளநீர், பழச்சாறு, சர்பத், நீர்மோர் ,கூழ் என்று செய்து சாப்பிடுவோம்.

அந்த வகையில் இன்று நாம் மாங்காய் வைத்து அருமையான சர்பத் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாங்காய் சர்பத் செய்வது மிகச் சுலபம் என்பதால் இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து சுவைக்க முடியும். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இந்த மாங்காய் சீசனில் இப்படி மாங்காய் சர்பத் செய்து கொடுத்து அசத்துங்கள் 


தேவையான பொருட்கள் :

மாங்காய் – 2
சீரகத்தூள் – 1ஸ்பூன் 
மிளகுத்தூள்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு 
சர்க்கரை அல்லது தேன்  -தேவையான அளவு 
புதினா இலைகள் -சிறிது 
ஐஸ் கட்டிகள்-தேவையான அளவு
 

சைட்டிஷ்க்கு இப்படி ஒரு முறை பலாக்காய் பொரியல் செய்து சாப்பிடுங்க!

செய்முறை :

முதலில் மாங்காயை தோல் சீவி ஒரே அளவிலான சிறு துண்டுகளாக  அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாங்காயை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்த விழுதை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய மாங்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு அதனை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். 

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட்டு சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மங்கை பாகு செய்து விட்டோம். இந்த மாங்காய் பாகை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு கரண்டி எடுத்து ஒரு க்ளாசில் சேர்த்து அதில் ஐஸ் கட்டிகள், புதினா இலைகள் மற்றும் மிளகுத்தூள் தூவனால் புளிப்பான மாங்காய் சர்பத் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios