சூடான ருசியான காளான் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் வாங்க!!
சைவம், அசைவம் சாப்பிடுபவர்கள் இருதரப்பினரும் காளான் சாப்பிடலாம். இதில் அதிகளவில் மினரல், காப்பர், பொட்டாசியம், சோடியம், ஆன்டி ஆக்சிடென்ட், ஜிங்க் ஆகியவை நிறைந்துள்ளன. இதில் அதிகமாக புரதச்சத்து உள்ளது. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
காளான் புலாவ், ஃபிரை, தொக்கு, காளான் குழம்பு என்று பலவகை ரெசிபிக்கள் செய்யலாம். தற்போது காளான் பிரியாணி செய்ய என்னென்ன வேண்டும் என்று பார்க்கலாம்.
இரண்டு கப் பாசுமதி அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
நீங்கள் வீட்டில் கரம் மசாலா வைத்து இருந்தாலும் பயன்படுத்தலாம். கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது கீழே கொடுத்து இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம்.
4 ஏலக்காய்
1 இஞ்ச் பட்டை
6 கிராம்பு
1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
1/4 டீஸ்பூன் மிளகு தூள்
1 ஜாதிபத்திரி
1 ஜாதிக்காய்
1/2 கல்பாசி
இவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்
காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்; இதுவும் கொங்குநாடு ஸ்பெஷல்தான்!!
குக்கரை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். பிரியாணி இல்லை ஒன்று, அன்னாசிப்பூ ஒன்று, சீரகம் அரை டீஸ்பூன், ஏலக்காய் இரண்டு, இரண்டு இஞ்ச் பட்டை, 4 கிராம்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
தற்போது நன்றாக நறுக்கிய ஒரு வெங்காயம், 2 பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பிரவுன் நிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு சேர்க்கவும். தற்போது இஞ்சி, பூண்டு வாசம் வந்த பின்னர், தக்காளி, உப்பு, மஞ்சள் ஒவ்வொன்றாக சேர்க்கவும். தக்காளி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
தற்போது அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய் பவுடர் சேர்க்கவும்,
இத்துடன் சிறிது புதினா சேர்க்கவும்
நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி: சுவையான அரிசி பாயாசம் செய்வது எப்படி?
கரம் மசாலா பவுடர் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். ஆறு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அல்லது அரை கப் தேங்காய் பால் சேர்க்கலாம். தேங்காய் பால் சேர்த்தல் இனிப்பாக இருக்கும். சிலருக்கு இது பிடிக்காது. எனவே, காரம் வேண்டும் என்றால் தயிர் மட்டும் சேர்க்கவும்.
தற்போது நன்றாக அனைத்தையும் ஒன்றாக கலந்து நறுக்கிய காளான் சேர்க்க வேண்டும். மசாலாவில் நன்றாக கலக்கவும் வரை மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
கழுவி வைத்து இருக்கும் அரிசியை போட்டு கலந்து விடவும். ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் குறைத்துக் கொள்ளலாம். நன்றாக நீள நீளமாக அரிசி வெந்து வரும். குக்கர் மூடியைப் போட்டு மூடி, விசில் போடவும். ஒரு விசில் வந்தவுடன், தீயை குறைக்கவும். மூன்று நிமிடங்கள் கழிந்தவுடன் ஸ்டவ்வை அணைக்கவும். சூடான, ருசியான பிரியாணி ரெடி. தொட்டுக் கொள்ள ரைதா வைத்துக் கொள்ளலாம்.