எள் சாப்பிட்டால் இத்தனை பக்க விளைவுகள் வருமா! யாரெல்லாம் சாப்பிடவே கூடாது தெரியுமா? எவ்வளவு சாப்பிடணும்!!
Side Effects of Sesame Seeds: எள் விதைகள் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டிருந்தாலும், அதிகமாக உண்ணும்போது உடலில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். அந்த பக்க விளைவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிப்பதில் எள் நன்கு வேலை செய்யும். இதில் நார்ச்சத்து, புரதச்சத்து காணப்படுவதால் செரிமானத்திற்கு நல்லது. எள் செரிமானத்தை தாமதப்படுத்துவதால் உடலில் இன்சுலின் உணர்திறன் குறையும். எள் உண்ணும்போது கணையத்தில் கணையத்தில் இன்சுலின் சுரப்பி நன்கு செயலாற்றும். ஆனால் அதிகமாக எள்ளை எடுத்து கொண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு, சர்க்கரையே இல்லாமல் லோ சுகர் நிலைக்கு போய்விடும். அதனால் சர்க்கரை நோயாளிகள் அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.
எள் விதைகள் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள தாதுக்கள் ரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவை கட்டுப்படுத்தும். ஆனால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எள் விதைகள் டேஞ்சர். ஏனென்றால் எள்ளை அதிகம் உண்ணும்போது, ரத்த அழுத்தம் ரொம்பவே குறைந்து விடும்.
குடல் அழற்சி வரும்!
குடல் அழற்சி ஏற்பட்டால் குடலின் பின்புறம் பெருக்கம் அடையும். இதனால் மோசமான வலி வரும். நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாத நிலையில் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எள் விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் ஆக தாமதமாகும். அதுமட்டுமில்லாமல் அது உடலிலே தங்கும் அபாயமும் உள்ளது.
ஒவ்வாமை
அளவுக்கு அதிகமாக எள் விதைகளை சாப்பிட்டால் ஒவ்வாமை வரும். இதனால் குமட்டல், சுவாசப் பிரச்சினை, அதிர்ச்சி ஆகியவை உண்டாகலாம்.
அதிக உடல் எடை
எள் விதையில் இருக்கும் நார்ச்சத்து எளிதில் செரிமானம் ஆகாது. அதனால் உடல் எடை கூடும். கொஞ்சம் எள் சாப்பிட்டாலும் உடல் எடை ரொம்ப அதிகரிக்கும்.
இதையும் படிங்க: நீங்க விரும்பி சாப்பிடும் இந்த 5 உணவுகள்.. சொந்த காசுல சூனியம் தான்!! கொஞ்சம் கூட ஆரோக்கியமானது கிடையாது!
எள் பக்கவிளைவுகள்
கீல்வாதம் பாதிப்பு உள்ளவர்கள், எள் உண்பதை தவிர்க்க வேண்டும். எள் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆக்சலேட்டுகள், கீல்வாததை ரொம்ப மோசமாக மாற்றும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். வில்சன் நோய் பாதிப்பு உள்ளவர்கள் எள் தொடர்பான உணவுகளை உண்ணக் கூடாது. இது அவர்களின் உடலில் தாமிர சத்தை அதிகமாக்கிவிடும். தாமிரம் உடலில் அதிகமானால் உயிருக்கு ஆபத்து.
எந்த அளவில் எள் சாப்பிட வேண்டும்?
நம்முடைய உடல் செயல்பாடு, உணவு வழக்கங்கள் போன்றவை தான் எள்ளை, ஒரு நாளுக்கு எவ்வளவு உண்ண வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. ஒரு வாரத்தில் குறைந்தது 40 முதல் 50 கிராம் வரையிலான எள் விதைகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எள்ளை உண்பது, அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது.
இதையும் படிங்க: கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்போது, 1 ஸ்பூன் கூட சாப்பிடாம இருக்கலாமா??