MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்க விரும்பி சாப்பிடும் இந்த 5 உணவுகள்.. சொந்த காசுல சூனியம் தான்!! கொஞ்சம் கூட ஆரோக்கியமானது கிடையாது!

நீங்க விரும்பி சாப்பிடும் இந்த 5 உணவுகள்.. சொந்த காசுல சூனியம் தான்!! கொஞ்சம் கூட ஆரோக்கியமானது கிடையாது!

நாம் விரும்பி சாப்பிடும் சில உணவு வகைகள் உடல் நலம் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். அவற்றில் எவ்வித சத்துக்களும் கிடைக்காது. அப்படிப்பட்ட 5 உணவுப் பொருட்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Apr 04 2023, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நம்முடைய உணவுமுறைதான் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்களுடைய ஆரோக்கியத்தை கணக்கிடலாம். ஏனென்றால் உணவு தான் நம்முடைய வாழ்நாட்களை தீர்மானிக்கிறது. இந்த பதிவில் நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

26

மைதா மாதிரியான சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். மைதாவில் தான் பெரும்பாலான பேக்கரி உணவு வகைகள் தயார் செய்கிறார்கள். நீங்கள் பிரெட் சாப்பிட்டால் கூட அதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கோதுமை மாவு, பல வகை தானியங்களில் செய்த பிரெட் ஆகியவை சாப்பிடலாம். நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. 

36

பிஸ்கட், குக்கீஸ், சிப்ஸ், பேக்கரி உணவுகளை சுத்திகரிக்கப்பட்ட மாவு, வெள்ளை சர்க்கரை, எண்ணெய் சேர்த்து தான் தயார் செய்வார்கள். இவற்றை நாள்தோறும் உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நம்முடைய உடலில் கொழுப்பு சேரும். உடல் எடையும் அதிகரிக்கும். ரிபைண்ட் எண்ணெய்களில் எந்த சத்தும் கிடைக்காது. அவற்றை பயன்படுத்துவதை தவிருங்கள். இவை தேவையில்லாத கொழுப்பை கொடுக்குமே தவிர உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆரோக்கியத்திற்கு முற்றிலும் கெடுதல். 

46

நாம் உண்ணும் ஜாம், ஜெல்லி, ஸ்வீட்ஸ் எல்லாமே வெள்ளை சர்க்கரை கொண்டு செய்யப்படுகிறது. இவற்றில் நல்ல ஊட்டச்சத்துகள் ஒன்றுமில்லை. ஆசைக்கு இதை எப்போதாவது எடுத்து கொள்ளலாம். மற்றபடி, இவற்றை உண்பதற்கு பதிலாக வீட்டில் ஏதேனும் அவல் பொரி, பொட்டு கடலை, அவித்த சுண்டல் போன்றவை தயார் செய்து சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம். 

56

கூல்டிரிங்க்ஸ் குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை, இளநீர், பழங்கள், உலர் பழங்கள், தேன், கருப்பட்டி, திராட்சை ஆகியவை எடுத்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள், பாக்கெட் உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். 

இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்கள்! தொண்டை வலி முதல் மண்டை வலி வரை.. நிவாரணம் தரும் அற்புத பொருள்!!

66

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நாம் உண்பது ஆரோக்கியமானது கிடையாது. பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் சோடியம் நைட்ரேட்டுகள், நைட்ரேட்ஸ் அதிக அளவில் இருக்கின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவை நமக்கு ஏற்படலாம். வாழ்வது கொஞ்ச காலமாக இருந்தாலும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதே நிம்மதியாக இருக்கும். அதனால் மேலே சொன்ன உணவுகளை தவிர்த்து நலமாக வாழுங்கள்!

இதையும் படிங்க: அம்பானி மனைவி வைத்த பார்டி.. கை துடைக்கும் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Paneer Side Effects: பன்னீர் அதிகம் சாப்பிட்டால் எந்தெந்த பிரச்சனை வரும் தெரியுமா? அதிர்ச்சி தகவல்
Recommended image2
பெண்கள் இரவில் மல்லிகை பூ வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? யாரும் சொல்லாத ரகசியங்கள்..!
Recommended image3
Kidney Health: சர்க்கரை நோயாளிகளே... சிறுநீரகத்தை பத்திரமா பாத்துக்க உங்க டயட்ல இந்த மாற்றங்களை செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved