அம்பானி மனைவி வைத்த பார்டி.. கை துடைக்கும் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக, ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா?
nita ambani: நீதா அம்பானி வைத்த பார்டியில் டிஷ்யூ பேப்பருக்கு பதில், ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மையா? என்பது குறித்து இந்த பதிவு விளக்குகிறது.
முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர். இவருடைய வீட்டு விழாக்கள் எப்போதும் ஆடம்பரமாக இருக்கும். அண்மையில் அம்பானி வீடு பணியாளர்களின் கல்வித் தகுதியும், சம்பளமும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அங்கு வேலை செய்யும் ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானி நடத்திய கலாசார மைய திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
நீதா அம்பானி அண்மையில் பல்துறை கலாச்சார மையம் ஒன்றினை தொடங்கினார். இந்த மையம் கலை, கைவினை பொருள்களை காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த கலாச்சார மையத்தின் திறப்பு விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டது. விழா தொடர்பான ஒரு பார்ட்டியில் வைத்திருந்த டிஷ்யூ பேப்பர் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏனென்றால் அவை காண்பதற்கு 500 ரூபாய் நோட்டுக்களை போல இருந்தன.
nita mukesh ambani
டிவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தில் டிஷ்யூ பேப்பர்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படம் உண்மையா? என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. அவை அந்த தட்டில் டிஸ்யூ பேப்பர்களுடன் இருந்த ஸ்வீட் தான் விலை அதிகமே தவிர, அந்த டிஷ்யூ பேப்பர்கள் சாதாரணமானவை. அவை 500 ரூபாய் நோட்டை போல அச்சடிக்கப்பட்டுள்ளன. அதனருகே இருந்த இனிப்பு வகைகளுக்கு 'தௌலத் கி சாட்' என பெயர். இது பணக்காரர்களின் இனிப்பு பண்டம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!
அந்த இனிப்பு பண்டம் தி இந்தியன் இந்த ஆக்சென்ட் என்ற உயர்தரமான உணவகத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. அம்பானியின் விருந்தில் இடம் பெற்றிருந்தால் அது குறைந்த விலையாக இருக்காதே!
தி இந்தியன் ஆக்சென்ட்டின் மெனுவின் படி, தௌலத் கி சாட்டின் விலை 725 ரூபாய். இது ஒரு பணக்காரர்கள் விரும்பும் இனிப்பு பண்டமாகும். தட்டை அழகாக காட்ட அதை சுற்றி போலியான 500 ரூபாய் காகிதங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதாவது டிஷ்யூ பேப்பருக்கு பதிலாகதான்!
இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023 எப்போது வருகிறது? இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?