கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்போது, 1 ஸ்பூன் கூட சாப்பிடாம இருக்கலாமா??
karunjeeragam benefits in Tamil: நம் வீட்டு சமையல் அறையில் உள்ள கருஞ்சீரகத்தில் ஏராளமான சத்துக்கள் பொதிந்து காணப்படுகின்றன. இதனை நாள்தோறும் உண்ணும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதை எப்படி சாப்பிட்டால் முழுபலனை பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
tamil health updates karunjeeragam benefits in Tamil: கருஞ்சீரகத்தில் நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12 ஆகியவை அதிகம் உள்ளன. நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து போன்றவையும், சோடியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய உடலுக்கு தேவையான தாதுக்களும் காணப்படுகின்றன. கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்தும்போது உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கும். இந்த எண்ணெயில், 17% புரதமும், 26% கார்போஹைட்ரேட்டும் உள்ளன. இதில் 57% தாவர எண்ணெய்கள் இருக்கின்றன. இந்த எண்ணெய் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பதிவு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நினைவாற்றல்!
கருஞ்சீரகத்தை நாள்தோறும் சாப்பிடுபவர்களின் மூளையின் செயல்பாடு அபாரமாக இருக்கும். வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை, தேனுடன் கலந்து உண்ணலாம். இதை உண்பதால் நினைவு திறன் அதிகமாக இருக்கும். ஆயுர்வேத மருத்துவம், வயதானவர்களுக்கு வரும் நினைவுத்திறன் குறைபாட்டிற்கு கருஞ்சீரகம் நல்ல பலன் அளிக்கும் என்கிறது. கொஞ்சம் புதினா இலைகளுடன், கருஞ்சீரகத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சைமர் மாதிரியான நரம்பு மண்டல பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
இதயம் பலமாகும்!
கருஞ்சீரகத்தை பாலில் கலந்து குடித்து வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் கட்டுக்குள் வரும். இதனால் இதயம் எந்த பிரச்சனைகளும் இன்றி நலமாக இருக்கும்.
வீக்கம் குறையும்!
உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைப்பதில் கருஞ்சீரக விதைகள் நன்கு செயல்படும். இதில் வீக்கத்திற்கு எதிராக செயல்படும் பண்புகள் உள்ளன. ஆகவே கை, கால் மூட்டுகளில் கருஞ்சீரக எண்ணெய் பூசினால் வீக்கம் குறையும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வெந்நீரில் கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடிப்பது நல்லது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
பற்களை வலிமையாக்கும்
கருஞ்சீரகத்தை சாப்பிடுபவர்களுக்கு ஈறு பிரச்சனை சுத்தமாக இருக்காது. பற்களை வலுவாக வைத்திருக்கும். பல் வலியால் அவதிப்பட்டால் கருஞ்சீரகம் பயன்படுத்துங்கள். வீட்டில் உள்ள கருஞ்சீரக எண்ணெயை 1/2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் தயிரில் கலந்து கொள்ளுங்கள். நாள்தோறும் 2 முறை, ஈறுகளில் இதை தேய்த்தால் பற்கள் வலுவாகும். எந்த பிரச்சனையும் ஏற்படாது.
உடல் எடை குறையும்!
கருஞ்சீரகம் சாப்பிடுவது நம்முடைய உடலின் எடையை குறைப்பதில் பெரும்பங்காற்றுது மிதமான சூடு உள்ள நீரில் கருஞ்சீரகத்தை கலந்து நாள்தோறும் பருகினால் உடல் எடை நன்கு குறையும்.
ஆஸ்துமா குணமாகும்!
ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை பயன்படுத்துவது நல்ல பலனளிக்கும். வெந்நீரில் கருஞசீரக எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் தேன் கலந்து அருந்தினால் ஆஸ்மாவை சமாளிக்கும் தெம்பு உடலில் வந்துவிடும்.
அழகை மேம்படுத்தும்!
நம்முடைய தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு கருஞ்சீரகம் உதவி செய்கிறது. பொலிவான சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெய், எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் சருமம் அழகாகும். கருஞ்சீரகம் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.
சிறுநீரக பராமரிப்பு
சர்க்கரை நோய் காரணமாக சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படும். இவர்களுக்கு கருஞ்சீரகம் நல்ல பலனளிக்கும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கருஞ்சீரகம் கட்டுப்படுத்தும். அதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தில் இருக்கும் யூரியாவின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் மற்ற பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.
தலைவலி குணமாகும்
தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு கருஞ்சீரகம் உதவியாக இருக்கும். எந்த தலைவலியில் அவதிப்பட்டாலும், கருஞ்சீரக எண்ணெய் கொஞ்சம் எடுத்து முன்நெற்றியில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோயுடன் போராடும்
கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள், நம் உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிகல்ஸ்களுக்கு எதிராக போராடும். எந்த உணவும் புற்றுநோயை குணப்படுத்தாது. மாறாக அதை எதிர்த்து போராட ஆற்றல் அளிக்கும். மார்பகம், நுரையீரல், கணையம் ஆகிய பகுதிகளில் வரும் புற்றுநோய்களுக்கு எதிராக போராடும்.
கருஞ்சீரகத்தின் பிற நன்மைகள்
*மலச்சிக்கலை அடியோடு நீக்கும்.
*மூல நோய்க்கு நிவாரணம் கொடுக்கும்.
*உடலில் படியும் கெட்ட கொழுப்பை குறைக்கும்
*வயிற்றுப்புண் ஆறும்.