நெய்யை தினமும் இப்படி சாப்பிட்டு பாருங்கள்...கொலஸ்டிரால் ஏறவே ஏறாது
உணவில் சுவையை அதிகரிக்க செய்யும் பொருட்களில் நெய்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் நெய்யை, உடல் எடை அதிகரிக்கும், கொலஸ்டிரால் அதிகரிக்கும் என பலரும் தவிர்ப்பது உண்டு. ஆனால் நெய்யை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் முழு ஆரோக்கிய பலனையும் பெற முடியும்.

சென்னை : நெய், பெரும்பாலான இந்திய குடும்பத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. அற்புதமான ஆரோக்கியக் பலன்களால் பல நூற்றாண்டுகளாக முக்கியமான ஆரோக்கியம், சுவை தரும் பொருளாக சமையலில் இடம்பிடித்து வருகிறது நெய். நெய்யில் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்களின் சேர்க்கையாக உள்ளது. இது அனைத்துப் பலனையும் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நெய்யின் தனித்துவமான அமைப்பு, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஆதரிக்க உதவுகிறது. கூடுதலாக, நெய் "காங்கியூகேட்டட் லினோலேசிக் ஆசிட்" (CLA) எனப்படும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டை கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.
நெய்யை உணவில் சேர்ப்பது, உங்கள் நலனைக் கவனிப்பதற்கும், உணவின் ருசியை உயர்த்துவதற்கும் எளிய வழியாகும். ஆனால் நெய் சாப்பிடுவதற்கான சரியான முறை எது? எப்படி எல்லாம் நெய்யை சாப்பிட்டால் முழு நன்மைகளையும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. உங்களுக்கும் இது பற்றி தெரியாது என்றால் இதோ சூப்பரான 5 வழிகள்...
உணவில் நெய் சேர்க்கும் சரியான முறை :
வெறும் வயிற்றில் :
பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறையுடன் தினசரி நாளை துவங்குவதற்கு ஏற்ற முறை இது. அதாவது, காலையில் வெறும் வயிற்றில் 1 டீ ஸ்பூன் நெய் சாப்பிடுவது. இந்த பழமையான பழக்கம் ஜீரணத்திற்கு உதவிடும். குடலுக்கு லூபிரிகேஷன் செய்யும் மற்றும் மாறுபட்ட எரிசக்தி உற்பத்தி செய்யும் திறனை அளிக்கும். இதனால் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
பிரேக்ஃபாஸ்ட் :
உங்கள் நாளை சத்தான முறையில் ஆரம்பிக்க, பன்னீர் அல்லது எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்துங்கள். தோசை, சப்பாத்தி, இட்லி, பிரெட் என எந்த வகையான காலை உணவாக இருந்தாலும் அதோடு நெய் சேர்த்து சாப்பிடலாம். இது சுவையை அதிகரிப்பதுடன் உங்கள் உடலுக்கு எரிசக்தி அதிகரிக்கும். புத்துணர்ச்சியாக நாளைத் தொடங்க தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும்.
எண்ணெய்க்கு மாற்று :
நெய் பெரும்பாலான சமையலில் எண்ணெய்க்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான உணவாக இருக்கின்றது. அது குறைந்த அளவில் சேர்த்து காய்கறிகளை வதக்க மற்றும் குழம்பு வகைகளை சமையல் செய்ய பயன்படுத்துங்கள். இது சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாகும். சிறிய அளவில் நெய் ஆரோக்கியமான கொழுப்பின் அளவை வழங்கும். இது அதிக சத்தான சமையல் மாற்றங்களைத் தேடும் ஒருவருக்கான சிறந்த விருப்பமான பொருளாக இருக்கும்.
ரொட்டி, புல்காவிற்கு ஏற்றது :
எடை குறைக்க முயற்சிக்கும் போது, உங்கள் புல்காவில் நெய்யை தவிர்க்காதீர்கள். புல்காவோ அல்லது ரொட்டியோ செய்யும் போது அதன் மீது நெய் சேர்ப்பது எடை குறைப்பு பயணத்திற்கு உதவும். கூடுதலாக, நெய் பயன்படுத்துவது எண்ணெய்யை விட ஒரு ஆரோக்கியமான மாற்றாகும். இது ஒரு சத்தான மற்றும் திருப்திகரமான உணவாகவும் இருக்கும்.
பருப்பு, நெய் :
பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமான ஒன்றாகும். கறிவேப்பிலை இலைகள், நெய், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து வண்ணமயமான கலவையை தயார் செய்யுங்கள். இந்த தாளிப்பை உப்பில்லாமல் கலந்து சூடான பருப்பு மேல் ஊற்றி, சாப்பிடுவது சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.