Onion Chutney: சிறுநீரகப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வெங்காய சட்னி: எப்படி செய்வது?
உடல் எடையைக் குறைப்பது மற்றும் கொழுப்பைக் குறைப்பது என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக அமையும். இன்று நாம் பல மருத்துவ பலன்களை கொண்ட வெங்காயத்தை வைத்து சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்
அன்றாட சமையலில் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது வெங்காயம். சாம்பாரின் சுவையைக் கூட்டுவதற்கு சின்ன வெங்காயம் தான் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அதுவே, சின்ன வெங்காயத்தில் சட்னி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சின்ன வெங்காயத்தை வேக வைத்தோ அல்லது வதக்கியோ எப்படி வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.
சின்ன வெங்காயம் (Small Onion)
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அடிக்கடி சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரகப் பிரச்சனை, உடல் எடையைக் குறைப்பது மற்றும் கொழுப்பைக் குறைப்பது என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக அமையும். இன்று நாம் பல மருத்துவ பலன்களை கொண்ட வெங்காயத்தை வைத்து சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
காஷ்மீர் மிளகாய் - 2 முதல் 3
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 முதல் 2 பல் (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
Combing Hair: தினந்தோறும் தலைமுடியை சீவினால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
சட்னி தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின்னர், அதில் மிளகாயை சேர்த்து, அதனுடைய நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர், வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கி, பொன்னிறமான பிறகு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுத்து அதனுடன் சுவைக்கு ஏற்ப, உப்பு மற்றும் புளியைச் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி சூடான பிறகு கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதில் அரைத்த கலவைகளை சேர்த்துவிட்டு, 2 நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான வெங்காயச் சட்னி தயாராகி விடும்.