Combing Hair: தினந்தோறும் தலைமுடியை சீவினால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!

முக அழகை பிரதிபலிக்க தலைமுடியை சரியான முறையில் சீவுவது முக்கியமாகும். மேலும் தினசரி தலைமுடியை சீவுவதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Amazing Benefits of Combing Your Hair Daily!

தினந்தோறும் நாம் செய்யும் அத்தியாவசியமான பழக்கவழக்கங்கள், நமக்கே தெரியாமல் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. அவ்வகையில், தினந்தோறும் பல் துலக்குவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் குளிப்பது போல தலைமுடியையும் நாம் மறக்காமல் சீவ வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். முக அழகை பிரதிபலிப்பதில் தலைமுடிக்கு மிக முக்கியமான பங்குண்டு எனலாம். ஒருவர் தலைமுடியை சரியாக சீவவில்லை என்றால், முகத்தின் அழகும் குன்றி விடும். ஆகவே, மற்றவர்கள் முன்பாக முக அழகை பிரதிபலிக்க தலைமுடியை சரியான முறையில் சீவுவது முக்கியமாகும். மேலும் தினசரி தலைமுடியை சீவுவதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

தலைமுடியை சீவுதல்

காலையில் ஒருமுறை மற்றும் இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒருமுறை என சராசரியாக, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தலைமுடியை முறையாக சீவ வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படிச் செய்வதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. மேலும், தினமும் தலைமுடியை சீவுவதால், தலையில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள முடியும். 

Onion: வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் தலைமுடி வளர்ச்சிக்கு நல்லதாம்!

தலைமுடி சீவினால் கிடைக்கும் நன்மைகள்

தினந்தோறும் சீப்பைக் கொண்டு, நம் தலைமுடியை சீவுவதால் அது உச்சந் தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, தலைமுடியின் வேர்களை பலமாக்குகிறது.

உச்சந் தலையில் இருக்கும் செபாசியஸ் சுரப்பிகள், sebum-த்தை உற்பத்தி செய்கிறது. இயற்கையாகவே தலைமுடியை நிலைநிறுத்தி, பாதுகாக்க இந்த sebum உதவி புரிகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது அதற்கும் மேல், தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக சருமத்தில் இருந்து முடியின் வேர் வரையிலும் இயற்கை எண்ணெய்கள் மிகச் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.

தலைமுடியை தினந்தோறும் சீவுவதால், முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

தினந்தோறும் மறக்காமல் தலைமுடியை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், மிச்சங்கள், அழுக்கு, ஹேர் ப்ராடக்டின், முடி மற்றும் உச்சந்தலையில் இருக்கும் மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவி செய்கிறது.

அடிக்கடி தலைமுடியை சீவினால், அது முடியின் அளவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவி புரிகிறது. 

தினமும் இரண்டு முறை தலை சீவுவதன் காரணமாக, தலையில் சேரும் அழுக்குகளை கண்டறிந்து நீக்க முடியும். வாரத்திற்கு இரண்டு முறை தலை குளிப்பதாலும்,தலையில் அழுக்குகள் அதிக அளவில் சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios