Zucchini juice: காலையில் டீ, காஃபி வேண்டாம்: இந்த ஜூஸை குடிங்க: பல நன்மைகள் கிடைக்கும்!

தொடர்ந்து டீ, காஃபி குடித்து வருவதால் சில பாதிப்புகளும் ஏற்படும். ஆனால் காலையில் காஃபி, டீ-க்கு பதிலாக சுரைக்காய் சாற்றை குடித்துப் பாருங்கள். அன்றைய நாள் முழுவதும் அதிக உற்சாகத்துடன் இருக்கலாம்.

No tea, no coffee in the morning: drink this juice: many benefits!

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நம்மில் அநேகம் பேர் உள்ளனர். சிலருக்கு டீ, காஃபி குடிக்கவில்லை என்றால், அன்றைய நாளே ஓடாது. அந்த அளவிற்கு டீ, காஃபி நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இதனை குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் என்பது உண்மை தான். இருப்பினும், தொடர்ந்து டீ, காஃபி குடித்து வருவதால் சில பாதிப்புகளும் ஏற்படும். ஆனால் காலையில் காஃபி, டீ-க்கு பதிலாக சுரைக்காய் சாற்றை குடித்துப் பாருங்கள். அன்றைய நாள் முழுவதும் அதிக உற்சாகத்துடன் இருக்கலாம்.

சுரைக்காய் சாறு

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் பி, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. செரிமான சக்தியை அதிகரிக்க சுரைக்காய் சாற்றைக் குடித்தால் போதுமானது. தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடித்தால் உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும். அவ்வகையில் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சுரைக்காய் சாற்றை எப்படி தயாரிக்க வேண்டும் என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நறுக்கப்பட்ட சுரைக்காய் - 1 கிண்ணம் 
செலரி - 1 கிண்ணம்
வெள்ளரிக்காய் - 1 கிண்ணம்
எலுமிச்சை சாறு - அரை பழம்
புதினா இலைகள் - சிறிதளவு
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

சுரைக்காயை மட்டும் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொண்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். அவற்றை நன்றாக அரைத்து விட்டு, வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் இந்த சுரைக்காய் சாற்றை ஒரு டம்ளருக்கு மாற்றி குடிக்கலாம்.

வீடே கமகமக்கும் அரேபியன் சிக்கன் பிரியாணி செய்யலாமா!

சுரைக்காய் சாற்றின் நன்மைகள்

தினந்தோறும் சுரைக்காய் சாற்றை குடிப்பதனால் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இது மன அழுத்தத்தை போக்கி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுவதால், சுரைக்காய் ஜூஸை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். 

சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவி புரிகிறது.

சில சமயங்களில் தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக கல்லீரலில் அழற்சி பிரச்சனை ஏற்படும். இதற்கு, சுரைக்காய் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios