Asianet News TamilAsianet News Tamil

வீடே கமகமக்கும் அரேபியன் சிக்கன் பிரியாணி செய்யலாமா!

வாருங்கள்! சூப்பரான சுவையில் அரேபியன் சிக்கன் பிரியாணி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 

How to make Arabian Chicken Briyani in Tamil
Author
First Published Feb 9, 2023, 7:07 PM IST

அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிப்பிகளில் பிரியாணியும் ஒன்று. பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சுவையான சிக்கன் பிரியாணியை செய்ய உள்ளோம். சிக்கன் பிரியாணியை செட்டிநாடு,கொங்கு நாடு, ஆம்பூர், மலபார் என்று  பல ஸ்டைல்களில் செய்யலாம். அவ்வகையில் இன்று நாம் அரேபியன் ஸ்டைலில் சிக்கன் பிரியாணியை செய்ய உள்ளோம்.

வாருங்கள்! சூப்பரான சுவையில் அரேபியன் சிக்கன் பிரியாணி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

பொடி செய்வதற்கு :

  • ஏலக்காய் -4
  • லவங்கம் -5
  • மிளகு - 1/2 ஸ்பூன்
  • இஞ்சி பொடி - 1/2 ஸ்பூன்
  • பிரியாணி இலை -2


பிரியாணி செய்வதற்கு :

  • சிக்கன்-1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம்-1
  • தக்காளி-1
  • பச்சை மிளகாய்-2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
  • பிரியாணி இலை - 2
  • நெய்- 1 ஸ்பூன்
  • ஏலக்காய் -2
  • பட்டை -2
  • லவங்கம்-1
  • மிளகு- 1 ஸ்பூன்
  • பட்டர்-2 ஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

புற்று நோயில் இருந்து நம்மை காக்கும் "வேர்க்கடலை சட்னி"!


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து கழுவி சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் தண்ணீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஏலக்காய், மிளகு, லவங்கம், பிரியனை இலை மற்றும் இஞ்சி பொடி ஆகியவற்றை சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து பிறகு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மிக்சி ஜாரில் தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும் 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, மிளகு சேர்த்து ,பின் அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி , எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது சிக்கன் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து வதக்கி விட வேண்டும். மசாலா சிக்கனில் சேர்ந்த பின்னர் அதில் 3 கப் அளவில் தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.


பிறகு பாத்திரத்தில் இருந்து வெந்த சிக்கனை தனியாக எடுத்துக் கொண்டு அதில் ஊற வைத்துள்ள அரிசி சேர்த்து வேக வைக்க வேண்டும். தண்ணீர் அனைத்தும் வற்றி அரிசி வெந்த பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் நெய் ஊற்றி அதனை பாத்திரத்தில் வைத்து விட்டு பின் பிரியாணி பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். இப்போது வேக வைத்துள்ள சிக்கனில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் பட்டர் சேர்த்து ஸ்ப்ரெட் சேர்த்து அதனை தவாவில் போட்டு பொன்னிறமாக வேக விட வேண்டும். இறுதியாக இந்த சிக்கனை பிரியாணியின் நடுவில் வைத்து சூடாக பரிமாறினால் சுவையான அரேபியன் சிக்கன் பிரியாணி ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios