Asianet News TamilAsianet News Tamil

முட்டையை பற்றி கூறும் சில கட்டுக்கதைகள் உண்மையா? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதற்கு மாறாக முட்டையை பற்றி கூறும் சில கட்டுகதைகளை இக்கட்டுரையில் காணலாம்.

myths and facts about eggs
Author
First Published Apr 19, 2023, 5:50 PM IST | Last Updated Apr 19, 2023, 5:52 PM IST


புரோட்டீன் அதிகம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் தான் முட்டை. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், காலையில் உணவிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இஞ்சி மற்றும் பூண்டினை ரொம்ப நாள் ஃபிரெஷா வச்சுக்க இந்த மாதிரி பண்ணுங்க!

 

தெரிந்து கொள்ளலாம் வாங்க...

1. முட்டையில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் அவை இருதய நோய்க்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நாம் உண்ணும் உணவால் ஏற்படும் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவை உயர்தாது என்று ஆய்வுகள் கூறுகிறது.

2. சமைத்த முட்டையை விட பச்சை முட்டையில் புரோட்டின் அதிகம் காணப்படுகின்றன. முட்டையில் சால்மோனெல்லா என்ற பக்டீரியா இருக்கிறது. முட்டையை சமைத்து சாப்பிடும் போது இந்த பாக்டீரியா அழிந்து விடும். ஒருவேளை முட்டையை பச்சையாக குடித்தால் உடலில் நோய் தொற்று ஏற்படும்.

3. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. 

4. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டை சாப்பிட்டால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.

5. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க வேண்டும். ஏனெனில் முட்டை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

6. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் முட்டையை தவிர்க வேண்டும். ஏனெனில் முட்டையை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கும்.

7. முட்டையின் வெள்ளை கருவில் தான் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் அடங்கியுள்ளது.முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்  கொள்ளலாம்.

8. தினம் ஒரு முட்டையை சாப்பிட்டால் புற்று நோயின் அபாயத்திற்கு அறிகுறி என்ற கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக முட்டையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், அவை நோய்யில் இருந்து நம்மை பாதுகாக்கும். குறிப்பாக பெண்கள் இதனை உட்கொண்டால் அவர்களை மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios