கோடை காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?...விடை இதோ!
பலவித ஊட்டச்சத்துக்கள் இருந்த பழங்களில் ஒன்று அன்னாசி . இது கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு உகந்த பழமா?..அவ்வாறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.
அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. மேலும் இப்பழம் அதிக உஷ்ணத்தையும் ஏற்படுத்துவதால் அதிகளவு உண்ணவும் கூடாது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன.
1. கோடை காலத்தில் பெரும்பாலான மக்கள் அன்னாசி பழம் மற்றும் அதன் சாற்றினை அதிகமாக குடிப்பது உண்டு. இது நமது நாவிற்கு சுவை தருவதுடன், உடலில் உள்ள நீர்சத்தை தக்கவைத்துக் கொள்கிறது.
2. அன்னாசி பழம் ஜுஸ் நாவிற்கு சுவையையும், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியும், ஈரப்பதத்தையும் கொடுக்கிறது.
இதையும் படிங்க: என்ன கருவாட்டில் இத்தனை நன்மைகள் இருக்கா...தெரிந்து கொள்வோம் வாங்க!
3. அன்னாசி பழத்தில் 'வைட்டமின் சி' இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்து விளங்குகிறது. மேலும் இது இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. அன்னாசி பழம் தண்ணீர் குடித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். மேலும் இது உங்களுக்கு இளமையான தோற்றத்தை அளிக்கும்.
5. ஜீரண சக்திக்கு உகந்தது அன்னாச்சி பழம். இது உங்கள் வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்கு சுலபமான முறையில் செரிமானத்தை உண்டாக்குகிறது.
6. அன்னாசிப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் ஒரு பக்க தலைவலி, மாலைக்கண் நோய், கண் பார்வை மங்கல், கண் உறுத்தல், காது வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
7. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.
8. பித்தத்தால் ஏற்படும் வாந்தி, பசி மந்தம் நீங்க அன்னாசி பழம் ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் இப்பழம் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
9. அன்னாசி மக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே கோடை காலத்தில் இப்பழத்தை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, தசையில் உள்ள வலிகளையும் நீக்கும்.
10. கோடை காலத்தில் சிலருக்கு குமட்டல் போன்ற உணர்வு ஏற்படும். அச்சமயத்தில் அன்னாசி பழம் சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.