அரிசி சாப்பிட்டும் உடல் எடையை சூப்பராக குறைக்கலாம்...எப்படி தெரியுமா?
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அரிசியை குறைக்க வேண்டும் அல்லது முழுவதுமாக ஒதுக்கி விட வேண்டும் என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரிசி சாப்பிட்டாலே உடல் எடை குறையும் என சொல்லப்படுகிறது. அரிசியை எப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்? வாங்க தெரிந்து கொள்ளலாம்

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் முதலில் கைவிட நினைக்கும் உணவுப் பொருள் அரிசி தான். இதில் கார்போஹேட்ரேட் அதிகம் என்பதால் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். அதனால் அரிசிக்கு பதிலாக வேறு என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரிசி சாப்பிட்டும், ஹெல்தியான முறையில் உடல் எடையை குறைக்க முடியும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். அப்படி ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்ற அரிசி வகை எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அரிசி இல்லாமல் எந்த ஒரு இந்திய உணவும் முழுமை பெறாது என்றே சொல்லலாம். பருப்பு, தயிர், குழம்பு என் அனைத்துடனும் சாப்பிட ஏற்ற நிறைவான உணவு ஆகும். இந்தியாவின் கலாச்சாரமாக உள்ள அரிசியில் பாஸ்மதி, கைகுத்தல், சிவப்பு அரிசி என பலவிதமான வகைகள் உள்ளது. இத்தனை வகை அரிசி இருக்கே இதில் எதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்? எந்த அரிசியை சாப்பிட்டால் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடியும்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நிறைவான உணவு என்பதால் அரிசி நல்லது தான். ஆனால் அனைவரும் அனைத்து வகையான அரிசிகளையும் சாப்பிடுவது ஏற்றதாக இருக்காது. சில குறிப்பிட்ட வகையான ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்கள் சில வகையான அரிசிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் :
உங்களுக்கு செரிமானம் அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது எளிதில் செரிமானம் ஆகக் கூடியது என்பதால் வயிற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. உடலுக்கு உடனடி ஆற்றலை தருவதுடன், செரிமான உறுப்புக்களை சரி செய்யக் கூடியதாகும்.
உடல் எடை குறைக்க :
உங்கள் உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் பிரவுன் ரைஸ் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். பிரவுன் ரைசில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க செய்யும். செரிமானத்தை ஊக்குவிக்கும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோய், இதய நோய் அல்லது இதய பாதிப்புக்கள், வளர்சிதை மாற்ற பாதிப்புக்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் சிவப்பு அரிசி உங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ளதால் இதய வால்வு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
அரிசியை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?
அரிசி சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்துவதால் உடல் எடை குறைய உதவுமா என கேட்டால் கண்டிப்பாக உதவாது என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்து. ஒவ்வொரு வகையான அரிசியும் ஒவ்வொரு வகையான ஆரோக்கிய நன்மைகளை தருக் கூடியவை. அதனால் இவற்றை உணவில் இருந்து முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல. அதே போல் அரிசி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதாக நினைப்பதும் முற்றிலும் தவறானதாகும். ஆனால் அரிசியை அதிகமாக சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும். அரிசியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்கும்.
உடல் எடை குறைய அரிசி சாப்பிடும் முறை :
* அரிசியில் கொழுப்பு சத்து கிடையாது. அதனால் இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் கண்டிப்பாக அரிசி சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை குறைக்க முடியும். எப்படி தெரியுமா?
* சாப்பிடுவதற்கு 10 அல்லது 12 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடித்து விடுங்கள். இதனால் அரிசி விரைவாக செரிமானம் ஆவதுடன், சரியான அளவில் உங்களால் சாப்பிட முடியும்.
* அரிசி, பருப்பு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன் சாலட்டை சாப்பிடுங்கள். இதனால் குறைவான அளவு அரிசியை எடுத்துக் கொண்டதும் உங்களுக்கு வயிறு நிறைந்த விட்டு உணர்வு ஏற்படும்.
* உணவில் அதிக அளவில் பருப்பு, தயிர் இருக்குமாறும், அரிசியின் அளவு குறைவாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.