வாழைப்பழம் அதிகம் விளையும் மாநிலம் என்பதால் கேரளாவில் தான் வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்யும் உணவுகளும் அதிகம். வாழைப்பழத்தை வைத்து சுவையான வாழைப்பழ அப்பம், தேய்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம். இது சிறந்த மாலை நேர ஸ்நாக்காக இருக்கும்.

இனிப்பும், காரமும் சேர்ந்த கேரளா ஸ்டைல் வாழைப்பழ அப்பமும், தேங்காய் சட்னியும் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்காக இருக்கும். வாழைப்பழத்தின் இயற்கையான இனிப்பு, தேங்காய் சட்னியின் மெல்லிய காரத்துடன் சேரும்போது ஒரு வித்தியாசமான சுவையில், வயிற்றுக்கு நிறைவான சாப்பாடு கிடைத்து விடும். கேரளாவின் ஃபேமசான ஸ்நாக் வகைகளில் வாழைப்பழம் அப்பமும் ஒன்று. இதை செய்வதும் சுலபம். இதற்கு "நெய்யப்பம்" என்றும் "பனியாரம்" என்றும் பல பெயர்கள் உள்ளது. கேரளா மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களிலேயே இது பிரபலமான உணவாகும். இது சிறிய குழி-அப்பக்காரத்தில் தயாரிக்கப்படும், வெளியில் சிறிது மொறு மொறுப்பாகவும், உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.

இந்த ரெசிப்பிக்கு மிகவும் முற்றிய, மென்மையான வாழைப்பழத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டு வாழைப்பழம் அல்லது மொந்தன் வாழைப்பழம் இதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

முற்றிய வாழைப்பழம் – 2
அரிசி மாவு – 1 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – 1/2 கப் (இயற்கை இனிப்பு தேவையெனில் தேன் சேர்க்கலாம்)
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு

உடல் எடை குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யனும்?

செய்முறை :

- வாழைப்பழங்களை நன்றாக மசித்து, மிக்ஸர் அல்லது கைவிரல் கொண்டு பேஸ்ட் போல தயார் செய்யவும்.
- அதில் நாட்டு சர்க்கரை (அல்லது கருப்பட்டி) சேர்த்து நன்கு கலக்கவும்.
- அரிசி மாவு, கோதுமை மாவு, ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இடியப்பம் மாவு போல் ஒரு தோசை மாவு பதத்துக்கு கலந்து விடவும்.
- இந்த கலவையை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- அப்ப கல் அல்லது பனியாரக்கல்லை சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றி, மேல் மூடி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.
- வாழைப்பழ அப்பத்தின் இனிப்பை மேலும் அதிகரிக்க, சற்று காரத்துடன் இருக்கும் தேங்காய் சட்னி சேர்க்கலாம். 

தேங்காய் சட்னி :

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை : 

- தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய கடாயில், சிறிதளவு எண்ணெய் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- இதை அரைத்த தேங்காய் விழுதுடன் சேர்த்தால் சூப்பரான கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்

துளசியை தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ?

பரிமாறும் முறை :

- வாழைப்பழ அப்பத்தை வெறும் தேங்காய் சட்னியுடன் மட்டும் பரிமாறலாம்.
- சூடான ஃபில்டர் காப்பி அல்லது கருப்பட்டி டீ கூட சேர்த்தால் உணவின் மகிமை இன்னும் அதிகமாகும்.
- இதை மாலை நேர ஸ்நாகாகவும், பகல் நேர சிற்றுண்டியாகவும் எளிதாக தயார் செய்து கொள்ளலாம்.


இந்த உணவு கேரளாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இயற்கையான வாழைப்பழம், தேங்காய், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவை சேரும் சமையல்களில், ஆரோக்கியம் மற்றும் சுவை இரண்டும் இணைந்திருக்கும். அடுத்த முறை மாலை நேரத்தில் என்ன ஸ்நாக் செய்யலாம் என்று யோசித்தால், வாழைப்பழ அப்பத்தையும், தேங்காய் சட்னியையும் கண்டிப்பாக முயற்து பாருங்க.