Asianet News TamilAsianet News Tamil

வீட்டிளுள்ள 3 பொருளில் 10 நிமிடத்தில் “திடீர் அல்வா” ரெடி!

வீட்டில் உள்ள 3 பொருள்களை வைத்து குவிக்கா, ஈஸியா டேஸ்ட்டா ஒரு ஸ்வீட் செய்ய போறோம்.  தீடீர்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்கன்னா இந்த மாதிரி செய்யலாம்ங்க.  வீட்டிலேயே உடனே செய்யக்கூடிய ஸ்வீட் தாங்க இது. என்ன ஸ்வீட்ன்னு தெரியனுமா? அப்போ படிச்சு பாருங்க.

Instant Halwa Recipe in Tamil
Author
First Published Sep 30, 2022, 11:04 AM IST

கோதுமை  இரத்தம் சுத்தமாக்கவும்,  இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளவும்,  உடல் எடை குறையவும்,  எலும்பு அழற்சியை சரி செய்யவும், செரிமான ஆரோக்கியத்திற்கும்  பயன்படுகிறது .

நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நோய் எதிர்ப்புத் திறனும் வலுப்பெற செய்யம்.  கல்லீரல்  மற்றும் இதயம்  சிறப்பாக செயல்படவும் வைட்டமின் ஏ சத்து தேவைப்படுகிறது.  அது போல  எலும்புகள் வலிமை பெறவும்,  கண் பார்வை தெளிவாக இருக்கவும்,  வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. வைரஸ் கிருமிகள் அழிய , பசியுணர்வு அதிகரிக்கவும் நெய் வழிவகுக்கும். 

குட்டிஸ் பேவரைட் பொட்டேடோ ட்ரையாங்கல் ஸ்னாக்ஸ்! எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்.

1 கப் சர்க்கரை 

1 கப் கோதுமை மாவு 

3/4 கப்  நெய் 

2 கப் தண்ணீர் 

முந்திரி பருப்பு 20 கிராம் 

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.  சர்க்கரை பாகு போல் வரும் வேளையில் அடுப்பை நிறுத்தவும். 

பின் அடுப்பில் ஒரு Pan  வைத்து அதில் நெய் சேர்த்து , நெய் உருகிய பின்பு முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து கை விடாமல் தொடர்ந்து வறுக்க வேண்டும். நிறம் மாறி நீர் போல் மாறும் வரை வறுக்க வேண்டும். 

சத்தான ஜோவர் பணியாரம் செய்யலாம் வாங்க!

இப்போது இதனுடன்  சிறிது சிறிதாக சர்க்கரை பாகை சேர்க்க வேண்டும். கட்டி தட்டாமல் கிளறி விட வேண்டும். அடுத்து  இதனுடன் முந்திரியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  அல்வா பதம் வரும் வரையில் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.  அவ்ளோதாங்க நெய்யின் கம கம வாசனையில் சுவையான  ஹல்வா ரெடி! நீங்களும் கண்டிப்பா முயற்சி பண்ணி பாருங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios