Asianet News TamilAsianet News Tamil

குட்டிஸ் பேவரைட் பொட்டேடோ ட்ரையாங்கல் ஸ்னாக்ஸ்! எப்படி செய்யலாம்? வாங்க பார்க்கலாம்!

குட்டிஸ்க்கு பிடித்த ஒரு காய் என்றால் கண்டிப்பா அது  பொட்டேடோ தாங்க. பொட்டேடோ பிரை, பொட்டேடோ சிப்ஸ் , பொட்டேடோ மசாலா என்று எது செய்து  கொடுத்தாலும் ஃபுள்ளா  கம்ப்ளீட் பண்ணிடுவாங்க. பொட்டேடோ  ட்ரையாங்கள் ஸ்னாக்ஸ்-  வெளில இதே வாங்கி சாப்பிட்டால் விலை ரொம்ப காஸ்டலியா இருக்கும் .  அதனால் வீட்லேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க .

How to make potato triangles in Tamil
Author
First Published Sep 27, 2022, 3:06 PM IST

வயிற்று உபாதைகள் ,  வயிற்றுப்புண்,  குடல் பிரச்சனைகள் , இரைப்பைக் கோளாறுகள் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.  உருளையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்  இது மிகவும் ஏற்றது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு 1/4 கிலோ 

மல்லி தழை  கையளவு 

1/2 ஸ்பூன்  சில்லி  பிளேக்ஸ் ( red chilli fakes )

Rava Appam : இன்ஸ்டன்ட் இனிப்பு! ரவை அப்பம்!

1/2 ஸ்பூன் ஓரிகனோ 

1/2 ஸ்பூன் உப்பு

 1/2 ஸ்பூன் மிளகு தூள் 

3 ஸ்பூன் சீஸ் (துருவியது)

2 ஸ்பூன்  கார்ன் மாவு 

2 ஸ்பூன் அரிசி மாவு,

சேமியா 50 கிராம் 

செய்முறை:

உருளைக்கிழங்கை  வேக  வைத்து கொண்டு பின் அதனை நன்றாக ஸ்மாஷ் செய்து கொள்ள  வேண்டும். இப்போது இதில் மல்லி தழை, சில்லி பிளேக்ஸ் , உப்பு, மிளகு தூள், சீஸ் , கார்ன் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து  கொள்ளவும். பின்  அந்த கலவையை  முக்கோண வடிவங்களில் வெட்டி கொள்ளவும்.  ஒரு தட்டில் கொஞ்சம் சேமியாவை கையால் பொடித்து கொள்ளவும்.

ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் வரகு அரிசி கிச்சடி !

பின் ஒரு கிண்ணத்தில்  கார்ன் பவுடர் , அரிசி மாவு ,உப்பு, மிளகு தூள் மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பால் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.   இப்போது  முக்கோண  உருளை கிழங்குகளை இந்த சோள மாவில் டிப் செய்து ,  பின் சேமியாவில்  முழுவதும் பிரட்டி  எடுக்க வேண்டும். 10 நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்க வேண்டும். 

அடுத்து  எண்ணையில்  பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான , கிரிஸ்பியான , டேஸ்ட்டான குட்டிஸ் பேவரைட்   பொட்டேடோ ட்ரையாங்கள் ஸ்னாக்ஸ்  ரெடி!    என்னங்க செய்து சாப்பிடனும் போல ஆசையா இருக்கா? அப்போ என்ன ?  இன்றைக்கே செஞ்சு பாத்து அசத்துங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios