Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் வரகு அரிசி கிச்சடி !

அரிசிகளில் பல வகை உண்டு அதில் ஒன்று தான் வரகரிசி.  இந்த வரகரிசி சாப்பிடுவதால் நமக்கு பல  நன்மைகள் உண்டாகின்றன 

How to make Varagu arisi Kichadi in Tamil
Author
First Published Sep 26, 2022, 7:11 PM IST

வரகரிசி  ரத்தத்தை தூய்மைப்படுத்தி , அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை  தடுத்து, சிறுநீரில் உள்ள  நச்சுகள் அனைத்தையும்  வெளியேற்றச் செய்யும். குடல்களில் உள்ள  புண்கள் குணமாக்குவதோடு , மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும் .   மேலும் ஆண்மை குறைபாட்டை நீக்கும், உடல் எடையை குறைக்க, இதயத்தை  ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எண்ணில் அடங்கா பயன்களை அள்ளித்தரும் வரகு அரிசியை வைத்து எப்படி கிச்சடி செய்யலாம் என்று பார்க்கலாம் .  

வரகு அரிசி கிச்சடி:

 நாம் ரவை, சேமியாவில் செய்வதைவிட வரகரிசியில் கிச்சடி செய்வதால் சுவை அதிகமாக இருக்கும்.  சர்க்கரை நோயாளிகளளுக்கு ஏற்ற உணவாக இது உள்ளது.

வரகு அரிசி கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

வரகு அரிசி 1கப் 
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 3 
பீன்ஸ் 1/4கப் பொடியாக அரிந்தது
கேரட்   1/4கப்  பொடியாக அரிந்தது
பச்சை பட்டாணி 1/4கப்
இஞ்சி துருவியது 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்  1/4ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 கொத்து 
எண்ணெய்  2ஸ்பூன்
 கடுகு  1/2ஸ்பூன் 
முந்திரிப் பருப்பு 5  
 கடலைப்பருப்பு 1/2ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு 1/2ஸ்பூன்

Bonda : ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு மொறு மொறுவென உளுந்து போண்டா!

செய்முறை:

ஒரு கப் வரகு அரிசியை வெறும் கடாயில்  நன்றாக சூடாகி வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் வரகரிசியை தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள  காய்கறிகளை பொடியாக வெட்டிக்  கொள்ளவும். முந்திரிப் பருப்பு மற்றும் நெய் சேர்த்து செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும் .

கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும். அடுத்து  பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன்  அனைத்து  காய்கறிகளையம்  சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் மூன்றரை கப் வரை தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள்  சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

Egg Chapathi Roll : எல்லாருக்கும் பிடித்த எக் சப்பாத்தி ரோல் ! இப்படி செய்து பாருங்க! 

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு  அரிசியை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விடவும்.  பின்  இதனை  குக்கருக்கு மாற்றி  அடுப்பில் மிதமான  தீயில் வைத்து 3  விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும் . அடுத்து சுமார்  5 நிமிடம் சிம்மில் இருக்கட்டும்.
பின் அடுப்பை ஆப் செய்து விட்டு  ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து சிறிது  நெய் சேர்த்து நன்றாக  கிளற வேண்டும். 

அவ்ளோதாங்க வரகரிசி கிச்சடி ரெடி! சட்னி அல்லது  சாம்பார்  சேர்த்து சாப்பிடலாம்.  மிகவும் சுவையாக இருக்கும் . நீங்களும் செய்து பாருங்க. 

Follow Us:
Download App:
  • android
  • ios