Asianet News TamilAsianet News Tamil

சத்தான ஜோவர் பணியாரம் செய்யலாம் வாங்க!

நாம்  குழி பணியாரம், காரப்பணியாரம்  சாப்பிட்டு இருப்போம் . ஜோவர்  எனப்படும்  வெள்ளை சோளமாவை வைத்து பணியாரம் செய்ததுண்டா? இல்லையா? அப்போ இதை படிச்சுட்டு செஞ்சு பாருங்க!

How to make Jowar paniyaram in Tamil
Author
First Published Sep 28, 2022, 5:55 PM IST

மக்கா சோளம் தான் நமக்கு அதிகம் தெரியும்.  ஆனால் வெள்ளை சோளம் என்ற ஜோவர் பற்றி அதிகம் தெரியாது   சிறுதானியங்களில்  ஒரு வகை தான் இந்த ஜோவர்  . இது பார்க்க உளுந்தை  போல்  நிறத்திலும் , வடிவத்திலும் இருக்கும்.  இதை கன்னடத்தில் – ஜுலா, இந்தியில்–ஜோவர்,  தெலுங்கில் – ஜொன்னலு என்றும் கூறுவர். 

ஜோவர் மாவை வைத்து  வட  இந்தியர்கள் சப்பாத்தி, தோசை,  இனிப்பு   போன்ற பல வகையான உணவுகளை செய்வார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது ஜோவர் மாவை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

கோதுமை , அரிசியை  விட 3 முதல் 5  மடங்கு வைட்டமின்கள்,  புரதம், தாதுக்கள் அதிகம் உள்ளவை. ஆற்றலை அதிகரிக்க,

சர்கரை நோயாளிக்கு ஏற்ற, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, செரிமானத்தை சீர்படுத்த , எலும்பை பலப்படுத்த,  குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்ய என்று இதன் ஆரோக்கிய பயன்கள் நீண்டு கொண்டே செல்லும். 

சுவையில் ஆளை மயக்கும் மஷ்ரூம் மசாலா!-ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டேஸ்ட்ல இப்படி செஞ்சு பாருங்க.!

சரிங்க இவ்ளோ நன்மைகளை பயக்கும்  ஜோவர்  மாவை வைத்து சத்தான பணியாரம் செய்வது எப்படி ? பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

1கப்- ஜோவர்   மாவு 

வாழைப்பழம் - 2

 3/4 கப்- வெல்லம்

2- ஏலக்காய் - 2

தண்ணீர் தேவையான அளவு 

நெய் தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் ஜோவர் மாவு, வாழைப்பழம் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். அதனுடன் துருவிய  வெல்லம்  மற்றும் ஏலக்காய் பொடி  ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.  அடுத்து  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் கலந்து கொள்ளவும் 

Chickpeas : கைப்பிடி அளவு உப்புக்கடலையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கா!

பின் அடுப்பில் குழிப்பணியார சட்டியை மிதமான தீயில் வைக்க வேண்டும். பின்  அதில் மாவை  ஊற்றி சிறிது நெய் விட்டு  இரண்டு பக்கமும் வேக வைத்து இறக்கினால் சத்தான மற்றும் சுவையான ஜோவர் பணியாரம் ரெடி! 

ரொம்ப எளிமையான, சுவையான அண்ட் ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் . குட்டிஸ்க்கு   ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு பெஸ்ட் சாய்ஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios