Asianet News TamilAsianet News Tamil

ஆரோக்கியம் நிறைந்த க்ரிஸ்பி "கோதுமை வடை"! செய்வது எப்படி?

வழக்கமாக கோதுமை மாவு வைத்து பூரி, தோசை, சப்பாத்தி,புட்டு போன்றவை செய்து இருப்போம் . இன்று நாம் சற்று வித்தியாசமாக கோதுமை மாவு வைத்து ஆரோக்கியத்தை தரும் சுவையான வடையை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

How to prepare Wheat Flour Vada in Tamil
Author
First Published Dec 8, 2022, 1:42 PM IST

நம்மில் பலருக்கும் மாலை நேரங்களில் சூடாக ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்போம். ஸ்னாக்ஸ என்றவுடன் நிச்சயமாக அதில் வடையும் இடம்பெறும் .வடையில் கீரை வடை, பருப்பு வடை, மசாலா வடை, மெது வடை என்று பல வகை இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் கோதுமை மாவை வைத்து சுவையான ஒரு வடையை தான் காண உள்ளோம். 

அரிசி மாவு,மைதா மாவு போன்றவற்றை வைத்து வடை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். கோதுமை மாவு வைத்து வடை செய்துளீர்களா? இல்லையா? அப்படியென்றால் இந்த பதிவின் மூலம் கோதுமை மாவு வைத்து வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. 

வழக்கமாக கோதுமை மாவு வைத்து பூரி, தோசை, சப்பாத்தி,புட்டு போன்றவை செய்து இருப்போம் . இன்று நாம் சற்று வித்தியாசமாக கோதுமை மாவு வைத்து ஆரோக்கியத்தை தரும் சுவையான வடையை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
பச்சரிசி மாவு - 3 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2
பொடித்த மிளகு -1 ஸ்பூன் 
சீரகம் -1/2 ஸ்பூன்
இஞ்சி-1 ஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் 
கறிவேப்பிலை -கையளவு 
மல்லித்தழை-கையளவு 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய்-தேவையான அளவு 

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வேர்க்கடலை குழம்பு!

செய்முறை:

முதலில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய்,மல்லித்தழை முதலியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பச்சரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதில் தயிர் சேர்த்துக் கொண்டு கிளறி விட்டு, பின் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கட்டிகள் ஆகாமல் மாவினை கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின், அதில் சீரகம், பச்சை மிளகாய்,,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி, மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் மாவினில் சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் இந்த கலவையில் பேக்கிங் சோடா, அரிந்து வைத்துள்ள கறிவேப்பிலை, மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு, பத்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பெரிய கடாய் வைத்து,அதில் எண்ணெய் சேர்த்து காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு, மாவினை கையில் எடுத்து வடை போன்று தட்டி , எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் அருமையான க்ரிஸ்பி கோதுமை மாவு வடை ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios